அசுஸ் ROG இந்திய சந்தையில் ROG Ally X சாதனத்தை அறிமுகப்படுத்தியது. கடந்த ஜூன் மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்த சாதனம் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. மெல்லியதாக உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த சாதனம் கைகளில் வைத்து விளையாடுவதற்கு ஏற்ப நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
புதிய அசுஸ் ROG Ally X மாடலில் AMD Z1 சிப்செட், ரேடியான் 780M iGPU வழங்கப்பட்டுள்ளது. இவை தலைசிறந்த கேமிங் அனுபவத்தை வழங்குகின்றன. இந்த சாதனம் 80Wh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இதன் கண்ட்ரோல் மற்றும் கஸ்டமைசேஷன் வசதிகளை வழங்குவதற்காக ஆர்மரி கிரேட் ஸ்பெஷல் எடிஷன் மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது.
மெமரியை பொருத்தவரை ROG Ally X 1TB M.2 NVMe Gen 4 SSD கொண்டிருக்கிறது. இதனை 4TB மற்றும் 24GB LPDDR5X 7500MT/s நீட்டித்துக் கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது. டிஸ்ப்ளேவை பொருத்தவரை Full HD 1080p ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், VRR சப்போர்ட் உள்ளது. இந்த சாதனத்தில் AMD ரேடியான் சூப்பர் ரெசல்யூஷன், ஃபிடெலிட்டி FX சூப்பர் ரெசல்யூஷன் மற்றும் AMD Fluid Motion Frame உள்ளிட்டவைகளுக்கான சப்போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.
இதில் டூயல் ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் மற்றும் வாழ்நாள் முழுக்க டால்பி பயன்படுத்துவதற்கான சந்தா வழங்கப்படுகிறது. மேலும் மேம்பட்ட ஜீரோ கிராவிட்டி தெர்மல் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இது சாதனம் எளிதில் சுடாவதை தடுக்கிறது. இத்துடன் இரண்டு USB C போர்ட்கள் உள்ளன. இந்த சாதனம் 678 கிராம்கள் எடை கொண்டுள்ளது. கனெக்டிவிட்டிக்கு வைபை 6E வழங்கப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் புதிய அசுஸ் ROG Ally X மாடலின் விலை ரூ. 89,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெறுகிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…