ஆடியோ டெக்னிகா நிறுவனத்தின் ATH-SQ1TW ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய இயர்பட்ஸ் பிரத்யேக சதுரங்க வடிவிலான டிசைன் கொண்டிருக்கிறது. இது மற்ற இயர்பட்களை விட வித்தியாசமாக காட்சியளிக்கிறது. ஆடியோ டெக்னிகா ATH-SQ1TW வயர்லெஸ் இயர்பட்ஸ்-இல் 5.8mm டிரைவர்கள் உள்ளன.
இவை பயன்பாட்டின் போது தலைசிறந்த ஆடியோ அனுபவம் வழங்குகிறது. மேலும் மியூசிக், வீடியோ, கேம்ஸ் மற்றும் போன் அழைப்புகள் என்று பல்வேறு சேவைகளுக்கு ஏற்ற வகையில் சிறப்பான ஆடியோ அவுட்புட் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் லோ லேடன்சி மோட் உள்ளது. இது வீடியோ மற்றும் கேம்களை இயக்கும் போது ஆடியோ தாமதமாக கேட்பதை தடுக்கிறது.
இந்த இயர்பட்ஸ் சார்ஜிங் கேசில் இருந்து எடுத்ததும் தானாக ஆன் ஆகிடும். பின் கேசில் வைத்ததும் தானாக ஆஃப் ஆகிவிடும். இதோடு இயர்பட்ஸ்-க்கு சார்ஜ் ஏற்றும். ஆண்ட்ராய்டு சாதனங்களுடன் இந்த இயர்பட்ஸ்-ஐ எளிதில் கனெக்ட் செய்துவிட முடியும். இதற்காக இந்த இயர்பட்ஸ்-இல் கூகுள் ஃபாஸ்ட் பேர் சப்போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் மியூசிக் மற்றும் அழைப்புகளை இயக்க டச் சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன.
குறைந்த எடையில் உருவாக்கப்பட்டு இருக்கும் இயர்பட்ஸ் பல்வேறு இயர் டிப் அளவுகளில் கிடைக்கிறது. இதனால் அணிந்திருக்கும் போது அதிக சவுகரியத்தை வழங்குகிறது. இந்த இயர்பட்ஸ்-ஐ முழுமையாக சார்ஜ் செய்தால் 19.5 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குகிறது. இத்துடன் குயிக் சார்ஜிங் வசதி உள்ளது. மேலும் பயனர்கள் ஒரு இயர்பட் அல்லது இரு இயர்பட்கள் என்று எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
ஆடியோ டெக்னிகா ATH-SQ1TW அம்சங்கள்:
குறைந்த எடை மற்றும் அடாப்டிவ் ஃபிட் டிசைன்
5.8mm டிரைவர்கள் மற்றும் ஹியர்-த்ரூ அம்சம்
கூகுள் ஃபாஸ்ட் பேரிங்
ப்ளூடூத் 5.0
லோ லேடன்சி மோட்
டச் கண்ட்ரோல்
அதிகபட்சம் 19.5 மணி நேர பிளேபேக்
குயிக் சார்ஜ் வசதி
IPX4 வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ஆடியோ டெக்னிகா ATH-SQ1TW ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் புளூபெரி, கேரமெல், பாப்சிகில், கப்கேக், பாப்கான் மற்றும் லிக்யோரைஸ் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 8 ஆயிரத்து 710 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அறிமுக சலுகையாக இந்த இயர்பட்ஸ் ரூ. 7 ஆயிரத்து 490 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விற்பனை அமேசான் வலைதளம் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெறுகிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…