latest news
குட்டிப்பெட்டி தான், ஆனா 120 இன்ச் டிவி.. பென்க் வெளியிட்ட சூப்பர் சாதனம்
பென்க் (BenQ) நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய டிவி ப்ரொஜெக்டரை அறிமுகம் செய்துள்ளது. பென்க் V5101i என அழைக்கப்படும் இந்த சாதனம் 4K RGB அல்ட்ரா ஷார்ட் த்ரோ லேசர் டிவி ப்ரொஜெக்டர் ஆகும். சமீபத்தில் தான் பென்க் நிறுவனம் TK710STi 4K HDR ஸ்மார்ட் ஷார்ட் த்ரோ லேசர் ப்ரொஜெக்டர் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. அதற்குள் தற்போது புதிய ப்ரொஜெக்டர் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய V5010i மாடல் பெரிய அறைகளுக்கு ஏற்றதாக இருக்கும் என்று பென்க் தெரிவித்துள்ளது. வெறும் 13 இன்ச் தூரத்தில் இருந்து 120 இன்ச் ஸ்கிரீனை ப்ரொஜெக்ட் செய்யும் திறன் இந்த சாதனத்தில் உள்ளது. இது 4K UHD தர காட்சிகளை பிரதிபலிக்கும். இதில் 8.3 மில்லியன் பிக்சல்கள் மற்றும் 2500 ANSI லூமென்களை கொண்டுள்ளது. இவை அதிக துல்லியமான காட்சிகளை பிரதிபலிக்க செய்யும்.
இந்த ப்ரொஜெக்டர் உடன் பில்ட்-இன் 40 வாட் ஆடியோ சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் இரட்டை 5 வாட் டுவீட்டர்கள், இரட்டை 15 வாட் வூஃபர்கள் உள்ளன. இவை சிறப்பான ஆடியோ அனுபவத்தை உறுதிப்படுத்துகிறது. மிக எளிமையாக இன்ஸ்டால் செய்ய இந்த மாடலில் ஆட்டோ ஸ்கிரீன் ஃபிட், ஆட்டோ கீஸ்டோன் கரெக்ஷன் மற்றும் 8-பாயிண்ட் கார்னர் ஃபிட் வழங்கப்பட்டுள்ளது.
இதில் HDMI 2.0 4K@120Hz இன்புட், ஆட்டோ லோ லேடன்சி மோட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இது கேமிங்கின் போது லேக் ஏற்படுவதை குறைக்கும். கூடுதலாக கூகுள் சான்று பெற்ற ஆண்ட்ராய்டு டிவி மற்றும் நெட்ப்ளிக்ஸ், அமேசான் பிரைம் ஸ்டிரீமிங் வழங்கப்படுகிறது. கனெக்டிவிட்டிக்கு ப்ளூடூத், டூயல் பேண்ட் வைபை, ஏர்பிளே, கூகுள் காஸ்ட் வழங்கப்படுகிறது.
புதிய பென்க் V5010i டிவி ப்ரொஜெக்டர் விலை ரூ. 6,50,000 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை முன்னணி மின்சாதன விற்பனை மையங்கள் மற்றும் பென்க் இந்தியா இ ஸ்டோர் வலைதளத்தில் நடைபெறுகிறது.