Connect with us

latest news

தினமும் 2 ஜிபி டேட்டா தரும் பிஎஸ்என்எல் பிரீபெயிட் திட்டங்கள் – விலை இவ்வளவு தானா?

Published

on

bsnl

இந்திய டெலிகாம் சந்தையில் 4ஜி சேவைகளை வெளியிட நீண்ட காலமாக போராடி வரும் நிறுவனமாக பிஎஸ்என்எல் இருக்கிறது. அதிவேக இணைய வசதியை வழங்கும் தொழில்நுட்பத்தை விரைவில் வழங்கி விடுவோம் என்று மத்திய அரசு தொடர்ந்து அறிவித்து வருகிறது. எனினும், பிஎஸ்என்எல் 4ஜி வெளியீடு தொடர்ந்து தாமதமாகி வருகிறது. முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே உருவாக்கப்படும் தொழில்நுட்பத்தில் பிஎஸ்என்எல் 4ஜி வெளியீடு நடைபெற இருக்கிறது.

இந்த தொழில்நுட்பம் 4ஜி சேவையை வழங்க பயன்படுத்தப்படுவதோடு மிக எளிமையான மென்பொருள் அப்கிரேடு மூலம் 5ஜி சேவையை வழங்கும். எதுவாயினும், பொதுத்துறை நிறுவனம் என்ற அடிப்படையில் பிஎஸ்என்எல் நிறுவனம் இன்றுவரை நாட்டிலேயே மிகக் குறைந்த விலையில் டெலிகாம் சேவையை வழங்கி வருகிறது. நாடு முழுக்க தங்குதடையற்ற நெட்வொர்க் இணைப்பை சாத்தியப்படுத்தும் நெட்வொர்க்-களில் ஒன்றாகவும் பிஎஸ்என்எல் விளங்குகிறது.

bsnl

bsnl

அந்த வகையில் பிஎஸ்என்எல் வழங்கி வரும் பிரீபெயிட் திட்டங்களில் தினமும் 2ஜிபி டேட்டா வழங்கும் திட்டங்கள் பற்றி தொடர்ந்து பார்ப்போம். இந்த திட்டங்கள் தினமும் அதிகளவு டேட்டா பயன்படுத்தும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்காக வழங்கப்பட்டு வருகிறது. தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் ஆறு பிரீபெயிட் திட்டங்களை பிஎஸ்என்எல் வழங்கி வருகிறது. இவை பிஎஸ்என்எல் வாய்ஸ் வவுச்சர்கள் பிரிவில் பட்டியலிடப்பட்டு உள்ளன.

இந்த பிரீபெயிட் திட்டங்களின் விலை ரூ. 228, ரூ. 239, ரூ. 269, ரூ. 347, ரூ. 499 மற்றும் ரூ. 769 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பல்வேறு பலன்களை வழங்குகின்றன. எனினும், இவை அனைத்தும் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்குகின்றன.

பிஎஸ்என்எல் ரூ. 228 மற்றும் ரூ. 239 சலுகைகள் ஒரு மாத கால வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. அதன்படி பயனர்கள் இதே திட்டத்திற்கு அடுத்த மாதம் அதே தேதியில் ரிசார்ஜ் செய்து இதன் பலன்களை அடுத்த மாதத்திற்கும் பெற முடியும். இரண்டு சலுகைகளிலும் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

bsnl

bsnl

இத்துடன் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை இந்த திட்டங்களில் வழங்கப்படுகிறது. இரு சலுகைகளிலும் சேலஞ்சஸ் அரினா மொபைல் கேமிங் சேவையும் சேர்க்கப்பட்டு இருக்கிறது. ரூ. 239 திட்டத்தில் பயனரின் மெயின் அக்கவுண்டில் ரூ. 10 பேலன்ஸ் தொகையாக வழங்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் ரூ. 269 திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், தினமும் 2 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் இரோஸ் நௌ எண்டர்டெயின்மெண்ட் சேவைகள் மற்றும் பிஎஸ்என்எல் டியூன்ஸ் மற்றும் ஹார்டி மொபைல் கேம் சேவைகள், சேலஞ்சஸ் அரினா மொபைல் கேமிங் சேவை வழங்கப்படுகின்றன. இத்துடன் ஜிங் மற்றும் லாக்துன் சேவைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

பிஎஸ்என்எல் ரூ. 347 திட்டத்தில் பயனர்களுக்கு 54 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இத்துடன் பயனர்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், தினமும் 2ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ், சேலஞ்சஸ் அரினா மொபைல் கேமிங் சேவை உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது.

ரூ. 499 மற்றும் ரூ. 768 திட்டங்கள் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளன. இரு திட்டங்களிலும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், தினமும் 100 எஸ்எம்எஸ், தினமும் 2 ஜிபி டேட்டா, ஒடிடி பலன்கள், ஜிங் மற்றும் லாக்துன் பலன்கள் வழங்கப்படுகின்றன.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *