Connect with us

latest news

ரூ. 50 ஆயிரத்திற்கு கேமிங் லேப்டாப்கள் – டாப் 5 பட்டியல் இதோ..!

Published

on

laptop

கேமிங் பிரியர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வரும் கேமிங் லேப்டாப் மாடல்கள் தற்போது அனைத்து விலை பிரிவுகளிலும் கிடைக்கின்றன. ஆரம்பக்கட்டத்தில் கேமிங் லேப்டாப்களின் விலை அனைவராலும் வாங்க முடியாத அளவுக்கு நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. ஆனால், காலம் மாறிக் கொண்டே இருக்க கேமிங் லேப்டாப்களின் வகைகள் அதிகரிக்க துவங்கின. மேலும் இவை ஏராளமான விலை பிரிவுகளில் கிடைக்கின்றன.

அதிக விலை பிரிவுகளில் கிடைக்கும் நிலையில், ஒவ்வொரு மாடலும் அதன் பிராண்டு மற்றும் விலைக்கு ஏற்ற செயல்திறன் வழங்கும் வகையிலேயே உருவாக்கப்பட்டு இருக்கும். அந்த வகையில், ரூ. 50 ஆயிரம் பட்ஜெட்டில் இந்திய சந்தையில் கிடைக்கும் டாப் 5 கேமிங் லேப்டாப்களின் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம். இதில் மிக குறைந்த விலையில் துவங்கி ரூ. 50 ஆயிரம் வரையில் லேப்டாப்கள் பட்டியலிடப்பட்டு உள்ளன.

1 – ஏசர் எக்ஸ்டென்சா EX215-31 லேப்டாப் :

acer

acer

இந்திய சந்தையில் ரூ. 26 ஆயிரத்து 999 எனும் துவக்க விலையில் கிடைக்கும் ஏசர் எக்ஸ்டென்சா லேப்டாப் 15.6 இன்ச் டிஸ்ப்ளே, 1366×768 பிக்சல் ரெசல்யூஷன், 2.4Ghz பென்டியம் குவாட் கோர் பிராசஸர், 4 ஜிபி DDR4 ரக ரேம், 256 ஜிபி SSD போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது. இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 6.5 மணி நேரத்திற்கான பேக்கப் வழங்கும் என ஏசர் தெரிவித்துள்ளது.

2 – லெனோவோ ஐடியாபேட் 310 லேப்டாப் :

lenovo ideapad 310

lenovo ideapad 310

இந்திய சந்தையில் இந்த லேப்டாப் விலை ரூ. 49 ஆயிரத்து 490 ஆகும். இதில் 15.6 இன்ச், 1366×768 பிக்சல் ரெசல்யூஷன், இண்டெல் கோர் i5 6th Gen பிராசஸர், 8 ஜிபி DDR4 ரேம், 2 ஜிபி கிராஃபிக்ஸ், 1 டிபி HDD SATA 5400 RPM மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள லி அயன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் ஐந்து மணி நேரத்திற்கு பேக்கப் வழங்கும்.

3 – எம்.எஸ்.ஐ. மாடர்ன் 14 B10MW-639IN லேப்டாப் :

msi laptop

msi laptop

ரூ. 49 ஆயிரத்து 500 விலையில் கிடைக்கும் எம்.எஸ்.ஐ. (MSI) லேப்டாப், 14 இன்ச் 1920×1080 பிக்சல் ஸ்கிரீன், இண்டெல் கோர் i5 10th Gen பிராசஸர், 8 ஜிபி DDR4 ரேம், 512 ஜிபி SSD மெமரி, லி-அயன் 3 செல் பேட்டரி கொண்டுள்ளது. இந்த லேப்டாப் மொத்த எடை 1.3 கிலோ ஆகும். இது 16.9mm தடிமனாக இருக்கிறது.

4 – அசுஸ் TUF கேமிங் A15 FA506IHRZ-HN111W லேப்டாப் :

asus tuf gaming a15

asus tuf gaming a15

இந்திய சந்தையில் அசுஸ் TUF கேமிங் லேப்டாப் விலை ரூ. 49 ஆயிரத்து 990 ஆகும். இந்த லேப்டாப் 15.6 இன்ச் 1920×1080 பிக்சல் ஸ்கிரீன் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த லேப்டாப் AMD Hexa Ryzen 5 சீரிஸ் பிராசஸர் கொண்டுள்ளது. இத்துடன் 8 ஜிபி DDR4 ரேம், 4 ஜிபி கிராஃபிக்ஸ், 512 ஜிபி SSD வழங்கப்பட்டு இருக்கிறது.

5 – ஏசர் இன்ஸ்பயர் 7 A715-75G லேப்டாப் :

acer 7

acer 7

15.6 இன்ச் 1920×1080 பிக்சல் ஸ்கிரீன் கொண்ட ஏசர் இன்ஸ்யபர் லேப்டாப் மாடலின் விலையும் ரூ. 49 ஆயிரத்து 990 என்றே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த லேப்டாப்பில் இண்டெல் கோர் i5 9th Gen பிராசஸர், 8 ஜிபி DDR4 ரேம், 4 ஜிபி கிராஃபிக்ஸ், 512 ஜிபி SSD வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த லேப்டாப் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 8.5 மணி நேரத்திற்கு பேட்டரி பேக்கப் வழங்கும்.

 

google news