latest news
சமரசம் வேண்டாம்.. ரூ. 30 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் சூப்பர் ஸ்மார்ட்போன்கள்..!
ரூ. 30 ஆயிரம் பட்ஜெட்டில் புதிதாக ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா? தலைசிறந்த அம்சங்களுடன், அசத்தலான அம்சங்கள் மற்றும் சிறப்பான ஸ்டைலிங் கொண்ட மிட் ரேன்ஜ் மாடல்கள் பட்டியலை தொகுத்து இருக்கிறோம். இதில் கூகுள் பிக்சல் 6a, மோட்டோரோலா எட்ஜ் 40, நத்திங் போன் என ஒவ்வொருத்தருக்கு ஏற்ற வகையில் பல்வேறு மாடல்கள் பட்டியலிடப்பட்டு உள்ளன.
அதிக சிறப்பான கேமரா, அசத்தலான டிஸ்ப்ளே அனுபவம், சீரான கேமிங் என எல்லாவற்றுக்கும் ஏற்ற அம்சங்களுடன் ரூ. 30 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள் அதிக எண்ணிக்கையில் கிடைக்கின்றன. பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்கள் அசத்தலான அம்சங்களை கொண்டிருப்பதோடு, அழகிய தோற்றம் கொண்டுள்ளன.
இங்கு குறிப்பிடப்பட்டு இருக்கும் மாடல்களில் மோட்டோரோலா எட்ஜ் 40, ஒப்போ ரெனோ 8டி மற்றும் நத்திங் உள்ளிட்டவை மிக அழகிய மற்றும் வித்தியாசமான டிசைன் கொண்டிருக்கிறது. அந்த வகையில், ரூ. 30 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் டாப் கிளாஸ் ஸ்மார்ட்போன்கள் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.
கூகுள் பிக்சல் 6a விலை | ரூ. 28 ஆயிரத்து 999 :
சமீபத்திய விலை குறைப்பு காரணமாக கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கூகுள் பிக்சல் 6a விலை குறைந்துள்ளது. அசத்தலான டிசைன், மிக குறைந்த எடை உள்ளிட்டவை இந்த ஸ்மார்ட்போனின் குறிப்பிடத்தக்க அம்சங்கள் ஆகும். இதில் கூகுள் டென்சார் பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. எவ்வித கலப்பும் இல்லாத ஆண்ட்ராய்டு அனுபவம் கூகுள் ஸ்மார்ட்போனின் தனித்துவ அம்சம் ஆகும். இத்துடன் தலைசிறந்த கேமரா, மேஜிக் இரேசர் போன்று சூப்பரான கேமரா அம்சங்கள் இதனை சிறந்த தேர்வாக மாற்றுகிறது.
மோட்டோரோலா எட்ஜ் 40 | விலை ரூ. 29 ஆயிரத்து 999 :
170 கிராம் என்ற மிக குறைந்த எடை இந்த ஸ்மார்ட்போனை கையில் வைத்திருக்க சிறந்த சாதனம் என்ற உணர்வை கொடுக்கிறது. இத்துடன் 6.55 இன்ச் அளவில் pOLED HDR10+ டிஸ்ப்ளே மற்றும் 144Hz ரிப்ரெஷ் ரேட், டால்பி அட்மோஸ் டியூனிங் கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டு இருக்கிறது.
முற்றிலும் புதிய மீடியாடெக் டிமென்சிட்டி 8020 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போன்களில் இதுவும் ஒன்று. புகைப்படங்களை எடுக்க இந்த மாடலில் 50MP பிரைமரி கேமரா, OIS, 2.0μm அல்ட்ரா பிக்சல் வழங்கப்பட்டு இருக்கிறது. இது தலைசிறந்த புகைப்படங்கள் கிடைப்பதை உறுதி செய்கிறது.
நத்திங் போன் (1) | விலை ரூ. 29 ஆயிரத்து 999 :
வழக்கமான ஸ்மார்ட்போன் டிசைனிங்கில் இருந்து தனிப்பட்டு நிற்கும் நத்திங் போன் (1) டிரான்ஸ்பேரன்ட் டிசைன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 778 பிளஸ் பிராசஸர், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி என இருவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 50MP டூயல் பிரைமரி கேமரா சென்சார் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.55 இன்ச் OLED டிஸ்ப்ளே, 2400×1800 பிக்சல் ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஒன்பிளஸ் நார்டு 2T | விலை ரூ. 28 ஆயிரத்து 999 :
ஒன்பிளஸ் நிறுவனத்தின் நார்டு 2T மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 1300 பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 50MP சோனி பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு லென்ஸ், 2MP மோனோ லென்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.43 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், 80 வாட் சூப்பர்வூக் சார்ஜர் வழங்கப்படுகிறது.
ஒப்போ ரெனோ 8T | விலை ரூ. 29 ஆயிரத்து 999 :
ஒப்போ நிறுவனத்தின் ரெனோ 8T ஸ்மார்ட்போன் சன்ரைஸ் கோல்டு நிறத்தில் கிடைக்கிறது. இது வெவ்வேறு கோணங்களில் ஸ்மார்ட்போனை வேறு நிறங்களில் காண்பிக்கிறது. 170 கிராம் எடை கொண்டிருக்கும் ரெனோ 8T ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் AMOLED டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. மிக மெல்லிய டிசைன் இந்த ஸ்மார்ட்போன் கைகளில் வைத்திருக்க சிறப்பான அனுபவம் வழங்குகிறது.
சாம்சங் கேலக்ஸி M53 5ஜி | விலை ரூ. 27 ஆயிரத்து 999 :
சாம்சங் நிறுவனத்தின் பட்ஜெட் ரக மாடல் கேலக்ஸி M53 5ஜி 5000 எம்ஏஹெச் பேட்டரி, 6.7 இன்ச் சூப்பர் AMOLED பிளஸ் டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், 108MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார், 8MP அல்ட்ரா வைடு லென்ஸ் மற்றும் 2MP மேக்ரோ லென்ஸ் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டிமென்சிட்டி 900 பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது.
ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் 5ஜி | விலை ரூ. 29 ஆயிரத்து 999 :
இந்திய சந்தையில் 200MP பிரைமரி கேமராவுடன் அறிமுகம் செய்யப்பட்ட முதல் ஸ்மார்ட்போன் எனும் பெருமையை இந்த மாடல் பெற்றது. இத்துடன் 8MP அல்ட்ரா வைடு லென்ஸ், 2MP மேக்ரோ லென்ஸ் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4980 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 120 வாட் ஹைப்பர் சார்ஜ் அடாப்டர் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனை 19 நிமிடங்களில் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்துவிடும்.