latest news
ஒன்பிளஸ் முதல் சாம்சங் வரை.. ரூ. 45 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள்!
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அடிக்கடி புது ஸ்மார்ட்போன்கள் தொடர்ச்சியாக அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. முன்னணி நிறுவனங்கள் சீரான இடைவெளியில் புதிய மாடல்களை அறிமுகம் செய்து வருவதை அடுத்து வாடிக்கையாளர்கள் எந்த மாடலை தேர்வு செய்ய வேண்டும் என்ற குழப்பத்தில் சிக்கித் தவிக்கின்றனர். அந்த வகையில், சிறந்த மொபைல்கள் பட்டியலை இந்த தொகுப்பில் அறிந்து கொள்ள முடியும்.
இந்திய சந்தையில் ரூ. 45 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களில் சிறந்த மாடல்கள் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.
ஒன்பிளஸ் 11R | விலை ரூ. 44 ஆயிரத்து 999 :
ஒன்பிளஸ் நிறுவனத்தின் சமீபத்திய மிட்-ரேன்ஜ் மாடல் தான் ஒன்பிளஸ் 11R. இதில் 6.74 இன்ச் 1240×2772 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், ஆண்ட்ராய்டு 13 ஒ.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP+2MP லென்ஸ், எல்.இ.டி. ஃபிலாஷ், 16MP செல்ஃபி கேமரா உள்ளது. 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் ஒன்பிளஸ் 11R, 100 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.
ஐகூ 9 ப்ரோ 5ஜி | ரூ. 44 ஆயிரத்து 999 :
ஐகூ நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் தர ஐகூ 9 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் கொண்டிருக்கிறது. இத்துடன் 6.78 இன்ச் AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், 4700 எம்ஏஹெச் பேட்டரி, 120 வாட் ஃபிலாஷ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 50MP பிரைமரி கேமரா, 50MP+ 16MP லென்ஸ், 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
சியோமி 12 ப்ரோ 5ஜி | ரூ. 42 ஆயிரத்து 390 :
சியோமி நிறுவனம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்த சியோமி 12 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் கொண்டிருக்கிறது. இத்துடன் 6.73 இன்ச் AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், ஆண்ட்ராய்டு 12 சார்ந்த MIUI ஒ.எஸ். வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 50MP வைடு ஆங்கில் பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 50MP டெலிபோட்டோ கேமரா, 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
கூகுள் பிக்சல் 6 ப்ரோ | விலை ரூ. 41 ஆயிரத்து 640 :
கூகுள் நிறுவனம் 2021 அக்டோபர் மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்த டாப் என்ட் ஃபிளாக்ஷிப் மாடல் தான் பிக்சல் 6 ப்ரோ. தற்போது ரூ. 41 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் பிக்சல் 6 ப்ரோ மாடலில் 6.7 இன்ச் P-OLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, 50MP பிரைமரி கேமரா, 5003 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
சாம்சங் கேலக்ஸி S20 FE 5ஜி | விலை ரூ. 29 ஆயிரத்து 990 :
குவால்காம் நிறுவனத்தின் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் கொண்டிருக்கும் கேலக்ஸி S20 FE 5ஜி 6.5 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 4500 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, ஆப்டிக்கல் கைரேகை சென்சார், டூயல் சிம் 5ஜி வசதி, 12MP வைடு ஆங்கில் பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 8MP டெலிபோட்டோ கேமரா, 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.