போட் நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஸ்மார்ட்வாட்ச்- போட் லூனார் ஒயசிஸ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய போட் லூனார் ஒயசிஸ் ஸ்மார்ட்வாட்ச் 1.43 இன்ச் அல்ட்ரா AMOLED டிஸ்ப்ளே, ப்ளூடூத் காலிங் வசதி என ஏராளமான அம்சங்களை கொண்டிருக்கிறது.
இதில் IP68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, ஏராளமான உடல்நல அம்சங்கள் உள்ளன. இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் டைனமிக் யுசர் இன்டர்பேஸ் உள்ளது. இது பயனர் ஸ்மார்ட்வாட்ச்-ஐ பயன்படுத்தும் விதம் மற்றும் அவர்களது பரிந்துரைகளுக்கு ஏற்ப தானாக மாறிக் கொள்ளும்.
இந்த ஸ்மார்ட்வாட்ச் மெட்டல் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது வாட்ச்-க்கு பிரீமியம் தோற்றத்தை வழங்குகிறது. இதில் பயன்படுத்தக்கூடிய கிரவுன் வழங்கப்பட்டு இருக்கிறது. பேட்டரியை பொருத்தவரை போட் லூனார் ஒயசிஸ் மாடல் முழு சார்ஜ் செய்து ப்ளூடூத் காலிங் பயன்படுத்தாத போது 7 நாட்களுக்கும் ப்ளூடூத் காலிங் பயன்படுத்தும் போது 3 நாட்களுக்கும் பேக்கப் வழங்கும்.
புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலில் GPS வசதி மற்றும் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் X1 பிராசஸர் மற்றும் அதிநவீன SIFLI சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. இது மேம்பட்ட கிராஃபிக்ஸ், பேட்டரி பேக்கப் வழங்குவதை உறுதி செய்கிறது.
இந்த வாட்ச் உடன் போட் கிரெஸ்ட் ஆப் கிடைக்கிறது. இதை கொண்டு SpO2, ஸ்லீப், ஸ்டிரெஸ் உள்ளிட்டவைகளை டிராக் செய்ய முடியும். இதில் பிரத்யேகமான எமர்ஜென்சி SOS மோட், வானிலை அப்டேட்கள், மியூசிக் கண்ட்ரோல், கேமரா, நோட்டிபிகேஷன், வாய்ஸ் கால், குறுந்தகவல்களுக்கு பதில் அளிக்கும் வசதி உள்ளிட்டவை வாட்ச்-லயே வழங்கப்பட்டு இருக்கிறது.
விலை விவரங்கள்:
போட் நிறுவனத்தின் புதிய லூனார் ஒயசிஸ் ஸ்மார்ட்வாட்ச் ரூ. 3,299 விலையில் வெளியாகி உள்ளது. இதன் விற்பனை போட் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளம், அமேசான், ப்ளிப்கார்ட் போன்ற ஆன்லைன் வலைதளங்களில் நடைபெறுகிறது. இந்த வாட்ச் உடன் ஆக்டிவ் பிளாக் சிலிகான் ஸ்டிராப், பிளாக் மெட்டல் ஸ்டிராப் மற்றும் ஆலிவ் கிரீன் மேக்னடிக் சிலிகான் ஸ்டிராப் வழங்கப்படுகிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…