Categories: tech news

சுதந்திர தின Vibes.. புது இயர்பட்ஸ் அறிமுகம் செய்த போட்

போட் நிறுவனம் இந்திய சந்தையில் புதிதாக நிர்வானா அயன் ANC இயர்பட்ஸ்-ஐ அறிமுகம் செய்தது. இந்த மாடல் இந்திய சுதந்திர தினம் மற்றும் அந்நிறுவனத்தின் ஐந்து கோடி மேட் இன் இந்தியா யூனிட்களை கொண்டாடும் வகையில் விசேஷமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இந்தியாவில் டிசைன் செய்யப்பட்டுள்ள போட் நிர்வானா அயன் ANC மாடலில் இந்தியா தீம் கொண்ட நிறங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. போட் நிறுவனம் ஐந்து கோடி மேட் இன் இந்தியா யூனிட்களை கொண்டாடும் வகையில் ராக் இன் இந்தியா திட்டத்தை துவங்கியுள்ளது.

இதன் அங்கமாகவே புதிய இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த இயர்பட்ஸ் இந்தியாவின் பாரம்பரியத்தை பரைசாற்றும் வகையில் உருவாக்கப்பட்டு இருப்பதாக போட் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. புதிய இயர்பட்ஸ் லிமிட்டெட் எடிஷன் முறையில், பயனர்களுக்கு பிரீமியம் அனுபவத்தை வழங்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன் இயர் டிசைன் கொண்டுள்ள போட் நிர்வானா அயன் ANC மாடலில், 10mm டிரைவர்கள், போட் சிக்னேச்சர் சவுண்ட் தொழில்நுட்பம், இரண்டு EQ மோட்கள், ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த தொழில்நுட்பம் வெளிப்புற சத்தத்தை அதிகபட்சம் 32db வரையில் குறைக்கும் திறன் கொண்டுள்ளது.

மேலும் இந்த இயர்பட்ஸ் மாடலில் குவாட் மிக்ஸ் ENx தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது மேம்பட்ட காலிங் அனுபவத்தை உறுதிப்படுத்துகிறது. இத்துடன் 60ms வரை லோ லேடன்சி வசதி, டைப் சி சார்ஜிங், இன்-இயர் டிடெக்ஷன், IPX4 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்திய சந்தையில் புதிய போட் நிர்வானா அயன் ANC மாடலின் விலை ரூ. 3,499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை போட் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் நடைபெறுகிறது.

Web Desk

Recent Posts

அமைச்சரவையில் மாற்றம்?…அன்பரசன் சொன்னது நடக்கப்போகுதா?…திமுகவினர் ஆர்வம்…

தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…

54 seconds ago

ஹர்திக் Red Ball பயிற்சி.. காரணம் இதுதாங்க.. பார்த்திவ் பட்டேல்

இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…

37 mins ago

புற்று நோய் பாதிப்பு அதிகரிக்கும்…அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை…

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…

1 hour ago

மழையால் இழந்த கலை…இரண்டாவது நாள் ஆட்டம் நிறுத்தம்…

இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…

1 hour ago

சன்னுக்கு ரெஸ்டு?…இன்னைக்கு ரெயின் ஸ்டார்ட்சு!…வானிலை ஆய்வு மையம் சொல்லியிருக்கும் அப்-டேட்…

தமிழகத்தில் கடந்த சில நட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்ளில் அடிக்கும் வெயிலுக்கு இணையான அளவும்,…

2 hours ago

இதுக்கு ஒரு என்ட் இல்லையா? பும்ராவை கூப்பிட்டு வச்சு பங்கமாக கலாய்த்த கோலி, ஜடேஜா..

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டி…

2 hours ago