போட் நிறுவனத்தின் முற்றிலும் புதிய நிர்வானா ஐவி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய இயர்பட்ஸ் மாடலில் 10 மில்லிமீட்டர் டிரைவர்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் இதில் வழங்கப்பட்டுள்ள பேட்டரியை முழு சார்ஜ் செய்தால் 50 மணி நேரத்திற்கான பிளேபேக் வழங்கும்.
மேலும், இந்த இயர்பட்ஸில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இது பின்னணி சத்தம், போக்குவரத்து சத்தம் மற்றும் இரைச்சல் உள்ளிட்டவைகை 50db வரையில் குறைக்கும் திறன் கொண்டுள்ளது. பீஸ்ட் மோடில் இந்த இயர்பட்ஸ் 60ms வரையிலான லேடன்சி ரேட் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
புதிய போட் நிர்வானா ஐவி இயர்பட்ஸ் மாடல் IPX4 தர சான்று பெற்ற டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. இதில் ப்ளூடூத் 5.3, மல்டிபாயின்ட் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டு பயனர்கள் ஏற்கனவே கனெக்ட் ஆகியிருக்கும் சாதனங்கள் இடையே எளிதில் மாறிக் கொள்ளலாம். இவற்றில் உள்ள அசத்தலான டிராக்கிங் வசதி, பயனர் இருக்கும் திசைக்கு ஏற்ப ஆடியோவை அட்ஜஸ்ட் செய்யும்.
மேலும், இதில் இன்-இயர் டிடெக்ஷன் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இது பிளேபேக் கண்ட்ரோல், பாடலை அப்படியே நிறுத்தி மீண்டும் இயக்கச் செய்வது போன்றவற்றை பயனர் இயர்பட்ஸை அணியும் போதும், கழற்றும் போதும் தானாக செயல்படுத்தும். இத்துடன் தனிப்பட்ட சவுன்ட் ப்ரொஃபைல்களை உருவாக்க கஸ்டமைஸ் செய்து கொள்ளும் EQ வழங்கப்படுகிறது.
இந்த இயர்பட்ஸில் உள்ள மிமி மற்றும் கூகுள் ஃபாஸ்ட் பேர் சப்போர்ட் பயனர்களுக்கு அசத்தலான அனுபவத்தை உறுதிப்படுத்தும். மேலும், இதில் 360 டிகிரி ஸ்பேஷியல் ஆடியோ வசதி வழங்கப்படுகிறது. இந்த இயர்பட்ஸ்-க்கு போட் ஹியரபில்ஸ் செயலிக்கான சப்போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த இயர்பட்களை முழுமையாக சார்ஜ் செய்தால் 50 மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்குகிறது.
இத்துடன் வழங்கப்படும் சார்ஜிங் கேஸில் 400mAh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. சார்ஜிங் செய்வதற்காக யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்படுகிறது. இதன் இயர்பட் ஒவ்வொன்றிலும் 40mAh பேட்டரி உள்ளது. இரண்டு இயர்பட்களையும் முழுமையாக சார்ஜ் செய்ய 35 நிமிடங்கள் ஆகும். சார்ஜிங் கேஸ்-ஐ முழு சார்ஜ் செய்வதற்கு 1.5 மணி நேரங்கள் வரை ஆகும்.
இந்திய சந்தையில் முற்றிலும் புதிய போட் நிர்வானா ஐவி மாடல் விலை ரூ. 2,999 ஆகும். இதன் விற்பனை செப்டம்பர் 4 ஆம் தேதி போட் அதிகாரப்பூர்வ வலைதளம், ப்ளிப்கார்ட், அமேசான், ரிலையன்ஸ் டிஜிட்டல், க்ரோமா மற்றும் விஜய் சேல்ஸ் உள்ளிட்ட தளங்களில் நடைபெற இருக்கிறது. இந்த இயர்பட்ஸ் கன்மெட்டல் பிளாக், கன்மெட்டல் வைட் மற்றும் குவார்ட்ஸ் சியான் நிறங்களில் கிடைக்கிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…