போட் நிறுவனம் இந்திய சந்தையில் தனது முற்றிலும் புதிய ஸ்மார்ட்-ரிங் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. போட் ஸ்மார்ட்-ரிங் ஆக்டிவ் பிளஸ் என அழைக்கப்படும் புதிய சாதனம் பட்ஜெட் விலையில் கிடைக்கிறது. இது ஆறு வெவ்வேறு அளவுகளில் கிடைக்கிறது. மேலும், இதில் ஏராளமான உடல்நலன் சார்ந்த அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி இதய துடிப்பு வேறுப்பாட்டை கண்டறியும் HRV, இரத்தத்தில் உள்ள காற்றின் அளவை கணக்கிடும் SpO2 மற்றும் காய்ச்சல் அளவு உள்ளிட்டவைகளை கண்டறியும் வசதிகள் இந்த ஸ்மார்ட்-ரிங் சாதனத்தில் உள்ளது. இந்த ஸ்மார்ட்-ரிங் சாதனத்துடன் மேக்னடிக் சார்ஜிங் கேஸ் ஒன்றும் வருகிறது.
கைவிரலில் இந்த ஸ்மார்ட்-ரிங் மோதிரம் போன்ற சாதனத்தை அணிந்து கொண்டால் ஓட்டப்பயிற்சி, யோகா, மிதிவண்டு ஓட்டுதல் மற்றும் பல்வேறு உடற்பயிற்சிகளை டிராக் செய்து உடல்நல விவரங்களை வழங்கும். இத்துடன் உடலின் வெப்பத்தை கணக்கிடும் வசதியும் இதில் வழங்கப்பட்டுள்ளது. பேட்டரியை பொருத்தவரை ஸ்மார்ட்-ரிங் சாதனத்தை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் ஐந்து நாட்கள் வரையிலான பேட்டரி பேக்கப் வழங்குகிறது.
இத்துடன் வரும் சார்ஜிங் கேஸ் பயன்படுத்தினால் இந்த ஸ்மார்ட்-ரிங் சாதனத்தை அதிகபட்சம் 30 நாட்களுக்கு பயன்படுத்த முடியும். இந்த சாதனத்தை மேக்னடிக் கேஸ் மூலம் சார்ஜிங் செய்யலாம். இதற்காக யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. 1.5 முதல் 2 மணி நேரத்தில் இந்த சாதனத்தை முழுமையாக சார்ஜ் செய்து கொள்ளலாம்.
கனெக்டிவிட்டிக்கு போட் ஸ்மார்ட்-ரிங் ஆக்டிவ் பிளஸ் மாடலில் ப்ளூடூத் 5.0 வழங்கப்பட்டு இருக்கிறது. கைவிரலில் அணியக்கூடிய சாதனம் என்பதால் இதற்கு 5 ATM தர டஸ்ட், ஸ்வெட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், இதை கொண்டு ஸ்மார்ட்போன் கேமராவை இயக்கும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் போட் ஸ்மார்ட்-ரிங் ஆக்டிவ் பிளஸ் மாடலின் எடை வெறும் 4.7 கிராம்கள் மட்டும் தான்.
விலை விவரங்கள்:
போட் ஸ்மார்ட்-ரிங் ஆக்டிவ் பிளஸ் இந்திய சந்தையில் மிட்நைட் பிளாக், ரேடியண்ட் சில்வர் மற்றும் ரோஸ் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 3,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விற்பனை அமேசான் மற்றும் போட் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் நடைபெறுகிறது.
ஆப்பிள் நிறுவனம் தனது ஏஐ ஆன siri-க்குப் புதிய வடிவம் கொடுக்க கூகுளின் Gemini உதவியை நாட இருப்பதாகத் தகவல்கள்…
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்டரான ஷான் வில்லியம்ஸ், தன் போதை பழக்கத்துக்கு அடிமையானதாக ஒப்புக்கொண்டிருக்கிறார். Sean Williams ஜிம்பாப்வே…
OpenAI நிறுவனம் தனது ஏஐ வீடியோ ஜெனரேட்டிங் செயலியான Sora செயலியை ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கும் அறிமுகப்படுத்தியிருக்கிறது. OpenAI Sora செயற்கை…
ஐபோன் பயனாளர்கள் முன்னெப்போதும் கேட்டிராத அளவுக்கு iPhone 16 Plus-ல் மிகப்பெரிய விலைக் குறைப்பு ஆஃபரை ஜியோ மார்ட் கொடுக்கிறது.…
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் Computer Emergency Response Team, அதாவது CERT-In, கூகுள்…
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, தனது ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பாகுபலி என்று பெயரிடப்பட்ட 4,410 கிலோ…