போட் நிறுவனத்தின் முற்றிலும் புதிய ப்ளூடூத் ஸ்பீக்கர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்பீக்கர் போட் ஸ்டோன் லுமோஸ் என அழைக்கப்படுகிறது. 60W சவுண்ட் வெளிப்படுத்தும் புது ப்ளூடூத் ஸ்பீக்கர் LED ப்ரோஜக்டர்களை கொண்டிருக்கிறது. இவை 7 விதங்களில் காட்சிகளை வெளிப்படுத்துகிறது.
புதிய போட் ஸ்டோன் லிமோஸ் ஏழு விதமான LED பேட்டன்களை ஒருங்கிணைத்து மென்மையான உணர்வை ஏற்படுத்தும் மின்னொலியை பிரதிபலிக்கும். இதில் உள்ள 60W ஸ்பீக்கர்கள், சீரீன ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. இந்த ஸ்பீக்கர் வெளிப்படுத்தும் ஆடியோ அனுபவத்தை போட் ஹியரபில்ஸ் ஆப் மூலம் கஸ்டமைஸ் செய்யும் வசதி உள்ளது.
பல்வித இசையை அனுபவிக்க ஏதுவாக இந்த ஸ்பீக்கரில் டூயல் EQ மோட்கள் உள்ளன. இத்துடன் வரும் ஆப் மூலம் ஸ்பீக்கரின் செட்டிங்களை இயக்குவதோடு, பேட்டரி எவ்வளவு இருக்கிறது என்பதையும் அறிந்து கொள்ளலாம். ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி கொண்டுள்ள போட் ஸ்டோன் லுமோஸ் AUX மற்றும் USB ஆப்ஷன்களையும் கொண்டுள்ளது. இதை கொண்டு பல்வேறு சாதனங்களில் இந்த ஸ்பீக்கரை இணைத்து பயன்படுத்தலாம்.
இத்துடன் பில்ட்-இன் மைக்ரோபோன் உள்ளது. முழு சார்ஜ் செய்தால் இந்த ஸ்பீக்கரை 9 மணி நேரத்திற்கு பயன்படுத்த முடியும். மேலும், இந்த ஸ்பீக்கர் IPX4 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது.
புதிய போட் ஸ்டோன் லுமோஸ் ஸ்பீக்கர் மிட்நைட் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 6,999 ஆகும். இதன் விற்பனை போட், ப்ளிப்கார்ட், அமேசான் போன்ற வலைதளங்களிலும் ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் நடைபெறுகிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…