பிஎஸ்என்எல் நிறுவனம் நீண்ட காலம் எதிர்பார்க்கப்பட்ட 4ஜி சேவையை தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் வெளியிட்டது. இதைத் தொடர்ந்து சென்னை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விரைவில் வழங்கப்படும் என்று பிஎஸ்என்எல் அறிவித்து இருக்கிறது.
அடுத்த மாத இறுதிக்குள் நாடு முழுக்க பிஎஸ்என்எல் 4ஜி சேவை வெளியீடு வழங்கப்பட்டு விடும் என்று கூறப்படுகிறது. தமிழகத்தை பொருத்தவரை பிஎஸ்என்எல் நிறுவனம் முதற்கட்டமாக IX.2 திட்டத்தின் கீழ் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் 4ஜி சேவையை வழங்க 2114 4ஜி டவர்களை கட்டமைக்கிறது.
4ஜி சேவையை வெளியிடும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டத்தில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை பாபா சுதாகார ராவ், பிஎஸ்என்எல் சென்னை டெலிபோன்ஸ் தலைமை பொது மேலாளர் முன்னிலையில் துவங்கப்பட்டது.
அதன்படி அன்னமலைச்சேரி, அத்திப்பேடு, எலவம்பேடு, கொளத்தூர், கோரமங்களம், எல்என்டி காட்டுப்பள்ளி, மீஞ்சூர், நொச்சிளி, பள்ளிப்பட்டு, பொன்னேரி, பூனிமாங்காடு, ஆர்கே பேட்டை, செம்பேடு, சீர்காளிகாபுரம், திருப்பளவைனம், திருவெள்ளைவாயல், வெங்கனூர் மற்றும் வீரானத்தூர் ஆகிய பகுதிகளில் பயனர்கள் பிஎஸ்என்எல் 4ஜி பயன்படுத்தலாம்.
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ரூ. 16.25 கோடி மதிப்பீட்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் விரைவில் துவங்கப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கலாம்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…