latest news
பிராட்பேன்ட் பயனர்களை ஈர்க்க அசத்தல் சலுகை அறிவித்த பிஎஸ்என்எல்
பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல், தனது பிராட்பேன்ட் சலுகைகள் மூலம் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும், நாடு முழுக்க இணைய சேவையை கொண்டு சேர்க்கும் வகையிலும் ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வரிசையில் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது காப்பர் மற்றும் பாரத் ஃபைபர் இணைப்புகளுக்கான இன்ஸ்டாலேஷன் கட்டணங்களை முழுமையாக ரத்து செய்து இருக்கிறது.
இத்துடன் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் குறைந்த விலை ஃபைபர் என்ட்ரி திட்டம் பயனர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் உள்ளது. பயனர்கள் இந்த திட்டத்தில் ஜூலை 30-ம் தேதிக்குள் இணைந்து கொள்ள முடியும். பிஎஸ்என்எல் நிறுவனம் பாரத் ஃபைபர் பிராட்பேன்ட் சேவைகளின் கீழ் வழங்கப்படும் ஃபைபர் டு ஹோம் சேவை (FTTH) ஆப்டிக்கல் ஃபைபர் கேபிள்களை பயன்படுத்தி அதிவேக இணைய இணைப்புகளை வழங்குகிறது.
பிஎஸ்என்எல் பிராட்பேன்ட் தனது FTTH திட்டங்களில் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகள் போன்ற பலன்களை வழங்குகிறது. இதன் மூலம் பயனர்கள் சீரான பிராட்பேன்ட் அனுபவத்தை பெற முடியும். FFTH பிரிவில் பிஎஸ்என்எல் நிறுவனம் அதிக சவால்களை எதிர்கொண்டு வருகிறது. மேலும் பலர் பிஎஸ்என்எல் பிராட்பேன்ட் சேவையில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நோக்கில் தொடர்ந்து பல்வேறு பலன்களை அறிவித்து வருகிறது. பிராட்பேன்ட் சேவையை மக்களிடம் கொண்டு சேர்க்க பிஎஸ்என்எல் நிறுவனம் குறுகிய காலக்கட்டத்திற்கு இன்ஸ்டாலேஷன் கட்டணங்களை ரத்து செய்வது மற்றும் தள்ளுபடிகளை வழங்குவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது.
அந்த வகையில் பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது லேன்ட்லைன் மற்றும் பிராட்பேன்ட் இணைப்புகளுக்கான இன்ஸ்டாலேஷன் கட்டணத்தை ரத்து செய்து இருக்கிறது. அரசு இணைப்புகள் தவிர்த்து மற்ற அக்கவுன்ட்களில் பயனர்கள் இந்த சலுகையை மார்ச் 31, 2024 வரை இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம். பயனர்கள் இந்த சலுகையின் கீழ் காப்பர் இணைப்புகளுக்கு அதிகபட்சம் ரூ. 250 வரையிலான இன்ஸ்டாலேஷன் கட்டணத்தை தள்ளுபடியாக பெற முடியும்.
பாரத் ஃபைபர் இணைப்புகளின் கீழ் பயனர்கள் அதிகபட்சம் ரூ. 500 வரையிலான தள்ளுபடி பெற்றுக் கொள்ளலாம். இந்த திட்டத்தின் மூலம் பிஎஸ்என்எல் சேவைகளின் கட்டணம் குறைவதோடு, அதிக வாடிக்கையாளர்கள் சேவையில் இணைய வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிஎஸ்என்எல் நிறுவனம் கவர்ச்சிகரமான ஃபைபர் என்ட்ரி லெவல் திட்டத்தை வழங்கி வருகிறது. இவை ஒரு மாதம், ஆறு மாதங்கள், 12 மாதங்கள் மற்றும் 24 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. இதன் மாதாந்திர திட்டத்தின் விலை ஜூலை 30 ஆம் தேதி வரை ரூ. 329 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தில் பயனர்களுக்கு 20Mbps வேகத்தில் 1000 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் அன்லிமிடெட் டேட்டா டவுன்லோடு மற்றும் அன்லிமிடெட் அழைப்புகள் வழங்கப்படுகிறது.