latest news
துவக்க விலை ரூ. 299 மட்டுமே – தினமும் 3 ஜிபி டேட்டா வழங்கும் அசத்தலான பிஎஸ்என்எல் திட்டங்கள்
பிஎஸ்என்எல் நிறுவனம் அதிக டேட்டா மற்றும் வாய்ஸ் கால் சேவை பலன்களை கொடுக்கும் இரண்டு பிரீபெயிட் திட்டங்களை பயனர்களுக்கு வழங்கி வருகிறது. இரு பிரீபெயிட் திட்டங்களின் விலை முறையே ரூ. 299 மற்றும் ரூ. 599 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன. இரு பிரீபெயிட் திட்டங்களும் புதிதாக அறிவிக்கப்பட்டவை இல்லை என்ற போதிலும், அதிக டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் பயன்படுத்துவோருக்கு இது சிறப்பானதாக இருக்கும்.
ரூ. 299 பிஎஸ்என்எல் பிரீபெயிட் திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இதில் அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 3 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் போன்ற பலன்கள் வழங்கப்படுகின்றன. தினசரி டேட்டா அளவை கடந்ததும், இணைய வேகம் 40Kbps ஆக குறைந்துவிடும். இவைதவிர இந்த திட்டத்தில் வேறு எந்த பலன்களும் வழங்கப்படவில்லை. ரூ. 599 பிரீபெயிட் திட்டம் வீட்டில் இருந்து பணியாற்றுவோருக்காக அறிவிக்கப்பட்டது ஆகும்.
இந்த பிரீபெயிட் திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கிறது. இதில் தினமும் 3 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் போன்ற பலன்கள் வழங்கப்படுகிறது. கூடுதல் வேலிடிட்டி தவிர ஜிங் + பிஆர்பிடி + ஆஸ்ட்ரோசெல், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இலவச அன்லிமிடெட் இணைய வசதி உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகின்றன.
இரண்டு பிஎஸ்என்எல் பிரீபெயிட் திட்டங்களும் அதிகளவு டேட்டா பயன்படுத்துவோருக்காக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பிரீபெயிட் திட்டங்கள் அதிவேக இணைய கனெக்டிவிட்டி, அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், தினமும் கணிசமான எஸ்எம்எஸ் உள்ளிட்ட பலன்களை வழங்குகின்றன.
இதுதவிர நாட்டில் 4ஜி சேவைகளை வெளியிடும் பணிகளில் பிஎஸ்என்எல் நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. 2023 செப்டம்பர் மாதம் சோதனைகள் நிறைவுற்றதும், தினமும் 200 சைட்களை நிறுவ பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது. 4ஜி சேவையை வழங்கும் பட்சத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் தனியார் டெலிகாம் நிறுவனங்களுடன் ஓரளவுக்கு போட்டியிட முடியும். 4ஜி சேவைகளை வழங்கும் போது பிஎஸ்என்ல் சேவையின் தரம் மேம்படுவதோடு, நாட்டின் இதர டெலிகாம் நிறுவனங்களுடன் சிறப்பாக போட்டியிட முடியும் என்று எதிர்பார்க்கலாம்.