பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். ரூ. 107 விலையில் பிரீபெயிட் ஆஃபரை வழங்கி வருகிறது. இந்த ஆஃபர், மற்ற டெலிகாம் நிறுவனங்களின் வேறு எந்த திட்டமும் வழங்க முடியாத அளவுக்கு பலன்களை வழங்குகிறது. மிகக் குறைந்த அளவு டேட்டா மற்றும் வாய்ஸ் கால் தேவைகளை பூர்த்தி செய்வோருக்கு ஏற்ற வகையில், பி.எஸ்.என்.எல். ரூ. 107 ஆஃபர் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
கவர்ச்சிகர பலன்களை, மிகக் குறைந்த விலையில் பி.எஸ்.என்.எல். ரூ. 107 ஆஃபர் வழங்கி வருகிறது. குறிப்பிட்ட அளவுக்கு, குறைந்த பயன்பாடுக்கு, எந்நேரமும் இணைப்பில் இருக்க பி.எஸ்.என்.எல். ரூ. 107 ஆஃபர் சிறப்பானதாக இருக்கும்.
பி.எஸ்.என்.எல். ரூ. 107 ஆஃபர் பலன்கள்:
பி.எஸ்.என்.எல். ரூ. 107 ஆஃபரில் 200 நிமிடங்களுக்கு உள்ளூர், எஸ்.டி.டி. மற்றும் ரோமிங் அழைப்புகள் வழங்கப்படுகிறது. வாய்ஸ் காலிங் தவிர, பயனர்களுக்கு 3 ஜிபி வரை இலவச டேட்டா வழங்கப்படுகிறது. பி.எஸ்.என்.எல். ரூ. 107 ஆஃபரின் வேலிடிட்டி 35 நாட்கள் ஆகும். இந்த டேட்டா கொண்டு பயனர்கள் அவசர இணைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும்.
பி.எஸ்.என்.எல். சிம் கார்டை ஆக்டிவாக வைத்துக் கொள்ள விரும்புவோருக்கு ரூ. 107 ஆஃபர் சிறப்பான தேர்வாக இருக்கும். இத்துடன் அழைப்புகள் மற்றும் அவசர கால இணைய சேவைகளை மிக குறைந்த விலையில் பயன்படுத்த முடியும். பி.எஸ்.என்.எல். ரூ. 107 ஆஃபர் ஒரு மாதத்திற்கும் அதிக நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது.
ரூ. 99 பிரீபெயிட் ஆஃபர் பயன்படுத்தும் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள், ரூ. 107 விலையில் கிடைக்கும் ஆஃபரை தேர்வு செய்து சற்றே அதிக பலன்களை பெறலாம். ரூ. 99 ஆஃபரை கடந்து, ஓரளவுக்கு குறைந்த விலையில் கிடைக்கும் ஆஃபராக பி.எஸ்.என்.எல். ரூ. 107 விளங்குகிறது. 200 நிமிடங்கள் வாய்ஸ் கால், ஓரளவுக்கு டேட்டா பேலன்ஸ் போன்ற பலன்கள் பி.எஸ்.என்.எல். ரூ. 107 ஆஃபரை குறைந்த விலையில் இணைப்பில் இருக்க செய்கிறது.
வாய்ஸ் கால் மற்றும் டேட்டா மட்டுமின்றி பி.எஸ்.என்.எல். ரூ. 107 ஆஃபரில் பி.எஸ்.என்.எல். டியூன்ஸ் இலவசமாக வழங்கப்படுகிறது. இதை கொண்டு பயனர்கள் விரும்பும் டியூன்களை கொண்டு தங்களுக்கான பிரத்யேக காலிங் அனுபவத்தை பெற முடியும்.
தொடர்ச்சியாக இரண்டு அல்லது மூன்றாவது முறையாக இந்த ஆஃபரை தேர்வு செய்து ரிசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அசத்தலான சலுகை வழங்கப்படுகிறது. முந்தைய ரிசார்ஜின் போது பயன்படுத்தாமல் விட்ட வேலிடிட்டி புதிய ரிசார்ஜ் உடன் சேர்க்கப்பட்டு விடும். இதன் மூலம் பயனர்கள் தங்களது ஆஃபர் அளவை நீட்டித்து, ரிசார்ஜில் அதிக பலன்களை பெற்றுக் கொள்ளலாம்.
பி.எஸ்.என்.எல். ரூ. 107 ஆஃபர் பெற விரும்புவோர் தங்களது பி.எஸ்.என்.எல். எண்-ஐ மைபி.எஸ்.என்.எல். (MyBSNL) அல்லது மூன்றாம் தரப்பு ஆன்லைன் ரிசார்ஜ் தளங்கள் மற்றும் பி.எஸ்.என்.எல். அதிகாரப்பூர்வ வலைதளங்களில் ரிசார்ஜ் செய்து கொள்ளலாம். பி.எஸ்.என்.எல். ரூ. 107 ஆஃபர் நாட்டின் பெரும்பாலான வட்டாரங்களில் கிடைக்கிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…