Categories: latest newstech news

மிக விரைவில் 4ஜி, அடுத்த ஆண்டு 5ஜி – பிஎஸ்என்எல் அதிரடி திட்டம்!

இமாச்சல பிரதேச மாநிலத்தின் கினாவூர், லஹௌல் மற்றும் ஸ்பிடி மாவட்டங்களை சேர்ந்த சுமார் 120 பழங்குடி கிராமங்களில் டிஜிட்டல் கனெக்டிவிட்டியை மேம்படுத்தும் வகையில், 4ஜி சேவையை வழங்க பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் 450 கிலோமீட்டர்களுக்கு அதிவேக இணைய வசதியை சாத்தியப்படுத்தும் ஆப்டிக்கல் ஃபைபர் கேபிள் இன்ஸ்டால் செய்யப்பட இருக்கிறது. இதற்கான திட்ட மதிப்பு ரூ. 50 கோடி ஆகும். இந்த தொகை 2022-23 நிதியாண்டுக்கான மூலதன செலவில் இருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

4ஜி வெளியீட்டு திட்டம்

ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் மற்றும் பிஎஸ்என்எல் இடையே நிலவி வரும் தொழில்நுட்ப சேவை இடைவெளியை நிரப்பும் வகையில், பிஎஸ்என்எல் நிறுவனம் தனது நெட்வொர்க் உள்கட்டமைப்புகளை விரிவுப்படுத்த முடிவு செய்திருக்கிறது. இதன் மூலம் 2023-க்குள் நாடு முழுக்க 4ஜி சேவைகளை வெளியிடும் பணிகளில் பிஎஸ்என்எல் நிறுவனம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்து வருகிறது.

BSNL-4G

இதுதவிர பிஎஸ்என்எல் நிறுவனம் தனது நெட்வொர்கில் 5ஜி சேவைக்கு ஏற்ற வகையில் மேம்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதன் காரணமாக 2024 ஆண்டிலேயே பிஎஸ்என்எல் 5ஜி சேவைகளும் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். இந்த ஆண்டிற்குள் நாடு முழுக்க 4ஜி சேவைகளை வெளியிடும் நோக்கில் நெட்வொர்க்-ஐ மேம்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதே நெட்வொர்க்-ஐ 5ஜி-க்கும் அப்கிரேடு செய்ய முடியும். அந்த வகையில் 5ஜி வெளியீடும் விரைவில் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

“தற்போது நாடு முழுக்க 9.9 சதவீதமாக இருக்கும் பிஎஸ்என்எல் சந்தை பங்குகளை 15-இல் இருந்து 20 சதவீதமாக அதிகப்படுத்த இலக்கு நிர்ணயித்து இருக்கிறோம். இமாச்சல பிரதேசத்தில் சந்தை பங்குகளை 150 சதவீதம் வரை அதிகப்படுத்த இலக்கு நிர்ணயித்து இருக்கிறோம்,” என்று பிஎஸ்என்எல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பிரவீன் குமார் பர்வர் தெரிவித்துள்ளார்.

ஃபைபர் நெட்வொர்க்குகளை இன்ஸ்டால் செய்வதற்காக பிஎஸ்என்எல் நிறுவனம் இமாச்சல பிரதேச அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த கூட்டணி மூலம் மாநிலத்தில் உள்ள தொழில்நுட்ப மையங்களை சேர்ந்த பணியாட்களை பிஎஸ்என்எல் ஃபைபர் நெட்வொர்க்-ஐ இன்ஸ்டால் செய்ய பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

காப்பர் வயர்களுக்கு மாற்றாக ஆப்டிக்கல் ஃபைபர் பயன்படுத்தப்பட உள்ளன. இதன் மூலம் அதிவேக இணைய சேவை வழங்க முடியும். இதற்காக 1300 சைட்கள் தொழில்நுட்ப முறையில் அப்கிரேடு செய்யப்படுகின்றன. இதுதவிர 250 முதல் 300 புதிய சைட்களும் உருவாக்கப்படுகின்றன. இதன் மூலம் சிறப்பான கவரேஜ் கிடைக்கும். 5ஜி சேவைகள் சிறப்பானதாக இருக்கும் என்பதோடு, ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுடன் போட்டியிடவும் உதவும் என்று பிஎஸ்என்எல் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

admin

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

3 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

3 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

3 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

3 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

3 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

3 weeks ago