tech news
இனிமே இப்படித் தான்.. அப்டேட் ஆன BSNL!
பிஎஸ்என்எல் நிறுவனம் புதிதாக ஓவர் தி ஏர் (OTA) மற்றும் யுனிவர்சல் சிம் (USIM) பிளாட்ஃபார்ம்களை அறிமுகம் செய்துள்ளது. இவை இரண்டும் பைரோ ஹோல்டிங்ஸ் உடனான கூட்டணியில் உருவாக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் நாடு முழுக்க பிஎஸ்என்எல் சேவைகள் மேம்படுத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது.
4ஜி மற்றும் 5ஜி சேவைகளை சப்போர்ட் செய்யும் புதிய பிளாட்பார்ம் மேம்பட்ட கனெக்டிவிட்டி மற்றும் அதிக தரமுள்ள சேவையை வழங்குகிறது. இவை மத்திய அரசின் ஆத்மனிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகின்றன.
இந்த தொழில்நுட்பம் பிஎஸ்என்எல் சிம் கார்டுகளை ரிமோட் முறையில் நிர்வகிக்கவும், வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் விரும்பும் வகையிலான நெகிழ்வுத்தன்மையை வழங்க உதவியாக இருக்கும். இந்த பிளாட்பார்ம் தற்போதைய 4ஜி மற்றும் வரவிருக்கும் 5ஜி நெட்வொர்க்குகளிலும் சீராக இயங்கும்.
இதன் மூலம் பயனர்கள் சிறப்பான நெட்வொர்க் கவரேஜ் மற்றும் அதிவேக டேட்டா பெற முடியும். புதிய பிளாட்பார்ம் அதிக நம்பகத்தன்மை கொண்டிருப்பதோடு, நாடு முழுக்க சீரான டெலிகாம் சேவையை வழங்குவதை உறுதி செய்கிறது.
இது மொபைல் நம்பர் போர்டபிலிட்டி எனப்படும் MNP மற்றும் சிம்களை மாற்றிக் கொள்ளும் வழிமுறைகளை எளிமையாக்கும். புதிய பிளாட்பார்ம் சண்டிகரில் துவங்கப்பட்டு இருக்கிறது. இதற்கான டிசாஸ்டர் ரிக்கவரி சைட் திருச்சியில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆபத்துக் காலங்களிலும் தடையற்ற சேவைகளை வழங்க முடியும்.