Connect with us

latest news

பிஎஸ்என்எல் பாவங்கள்: காவி கலரில் புது லோகோ.. கூடவே அந்த எழுத்து, நோட் பண்ணீங்களா?

Published

on

பொதுத்துறை டெலிகாம் நிறுவனம் பி.எஸ்.என்.எல். லோகோ மாற்றப்பட்டுள்ளது. லோகோவில் அதிக மாற்றங்கள் இன்றி புதிதாக காவி நிறம், இந்தியா என்ற வார்த்தைக்கு பதிலாக பாரத் கூடவே மூன்று வார்த்தைகள் கொண்ட குட்டி டேக்லைன் புதிய லோகோவில் இடம்பெற்று இருக்கின்றன.

சமீபத்தில் மாற்றப்பட்ட அரசு துறை சேவைகளின் லோகோக்களை போல் தற்போது பி.எஸ்.என்.எல். நிறுவன லோகோவிலும் காவி நிறம் பிரதானமாக இடம்பெற்றுள்ளது. காவி கலக்கப்பட்ட புதிய பி.எஸ்.என்.எல். லோகோவை மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய ஸ்கிந்தியா வெளியிட்டார். புதிய லோகோ மட்டுமின்றி பி.எஸ்.என்.எல். வழங்க இருக்கும் ஏழு புதிய சேவைகளையும் அவர் துவங்கி வைத்தார்.

அதன்படி பி.எஸ்.என்.எல். நிறுவனம் ஸ்பேம் இல்லா நெட்வொர்க் அனுபவம், வைபை ரோமிங், டைரக்ட்-டு-டிவைஸ் கனெக்டிவிட்டி, ஃபைபர் சார்ந்த இன்ட்ராநெட் லைவ் டிவி சேவை, ஆட்டோமேட் செய்யப்பட்ட சிம் கியோஸ்க், சாட்டிலைட் டு டிவைஸ் கனெக்டிவிட்டி போன்ற சேவைகளை வழங்க இருக்கிறது.

இதோடு பி.எஸ்.என்.எல். மற்றும் சி.டி.ஏ.சி. இணைந்து லோ-லேடன்சி 5ஜி கனெக்டிவிட்டி வழங்கவுள்ளன. இது மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது. இது டெலிகாம் துறையில் நாட்டின் வளர்ச்சியை பிரதிபலிக்கும் வகையில் அமைகிறது. 5ஜி தவிர பி.எஸ்.என்.எல். நிறுவனம் சொந்தமாக 4ஜி டெலிகாம் ஸ்டேக் உருவாக்கி இருக்கிறது. இதை கொண்டு 5ஜி சேவைக்கு சீராக அப்கிரேடு செய்து கொள்ளலாம்.

 

google news