பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை பிராட்பேண்ட் இணைப்புகளுக்கு இன்ஸ்டாலேஷன் கட்டணங்களை முழுமையாக ரத்து செய்வதாக அறிவித்து இருக்கிறது. பயனர்கள் பெறும் பிராட்பேண்ட் இணைப்புக்கு ஏற்றவாரு இன்ஸ்டாலேஷன் கட்டணம் வசூலிப்பதை பிஎஸ்என்எல் வாடிக்கையாக கொண்டிருக்கிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் பல்வேறு வகையான இணைய சேவைகளை வழங்கி வருகிறது.
இதில் காப்பர் இணைப்புகள் மற்றும் ஃபைபர் இணைப்புகள் அடங்கும். தற்போது நாடு முழுக்க பிஎஸ்என்எல் இணைய சேவையை வழங்கி வருகிறது. அந்த வகையில் இன்ஸ்டாலேஷன் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்வதன் மூலம் பிஎஸ்என்எல் சேவையில் புதிய வாடிக்கையாளர்கள் இணையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
பிஎஸ்என்எல் காப்பர் இணைப்புகளுக்கு இன்ஸ்டாலேஷன் கட்டணம் ரூ. 250 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது இந்த கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்பட்டு விட்டது. இதே போன்று பிஎஸ்என்எல் ஃபைபர் இணைப்புகளுக்கான கட்டணம் ரூ. 500 முழுமையாக ரத்து செய்யப்பட்டு விட்டது. இந்த நடவடிக்கையின் மூலம் பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் சேவையில் அதிக வாடிக்கையாளர்கள் இணையும் வாய்ப்புகள் அதிகரித்து இருக்கிறது.
இந்திய சந்தையின் பல்வேறு மாநிலங்களில் பிஎஸ்என்எல் ஃபைபர் திட்டங்களின் விலை மாதத்திற்கு ரூ. 329 என்று துவங்குகிறது. ரூ. 329 திட்டத்தில் அதிகபட்சம் 20Mbps வேகத்தில் 1TB வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது. இதை கடந்த பின் இணைய வேகம் 4Mbps ஆக குறைந்துவிடும். பிஎஸ்என்எல் நிறுவனம் குறைந்த விலை திட்டங்களையும் வழங்கி வருகிறது. ஊரக பகுதிகளில் வசிப்போருக்கு விசேஷமான அதிவேக இணைப்புகள், ஓரளவுக்கு குறைந்த விலையில் வழங்கப்படுகிறது.
பிஎஸ்என்எல் ஃபைபர் ரூரல் ஹோம் வைபை திட்டம் 30Mbps வேகம் மற்றும் 1TB வரையிலான டேட்டா வழங்குகிறது. இந்த திட்டம் ஊரக பகுதிகளில் வசிப்போருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இதுதவிர ரூ. 329 திட்டம் அனைவருக்கும் வழங்கப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் இருந்து, புதிய இணைப்பு பெறும் வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தை பெற்றுக் கொள்ள முடியும்.
இத்துடன் குறைந்தபட்சம் ஆறுமாத காலத்திற்கான திட்டங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, பிஎஸ்என்எல் நிறுவனம் சிங்கில் பேண்ட் ONT வைபை ரௌட்டரை இலவசமாக வழங்குகிறது. 12 மாத கால திட்டம் வாங்குவோருக்கு டூயல் பேண்ட் வைபை ரௌட்டர் வழங்கப்படுகிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…