செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இல்லாமல் எதுவும் இல்லை என்ற நிலை மெல்ல உருவாகி வருகிறது. தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்ப துறையில் தொடர்ச்சியாக அதிக முதலீடுகளை செய்து வருகின்றன. நம் அன்றாட வாழ்க்கையில் ஏஐ எல்லாவற்றிலும் மெல்ல நுழைந்து வருகிறது.
இந்த நிலையில், சீனாவை சேர்ந்த ஆய்வாளர்கள் ஏஐ தொழில்நுட்பத்தை செக்ஸ் ரோபோக்களில் வழங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்த தகவல்களை சௌத் சைனா மார்னிங் போஸ்ட் வெளியிட்டுள்ளது. அதன்படி ஷென்செனை சேர்ந்த நிறுவனமான ஸ்டார்பெரி டெக்னாலஜி, ஏஐ சார்ந்த செக்ஸ் பொம்மைகளை உருவாக்க இருக்கிறது. சீனாவில் அதிக பிரபலமாக இருக்கும் செக்ஸ் பொம்மை உற்பத்தியாளர்களில் ஸ்டார்பெரி முதன்மையாக இருக்கிறது.
“நாங்கள் அடுத்த தலைமுறை செக்ஸ் பொம்மையை உருவாக்கி வருகிறோம். இந்த பொம்மை பயனர்களுடன் உரையாடவும், உடலோடு இணையும் செய்யும். எங்களின் ப்ரோடோடைப் மாடல்கள் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று தெரிகிறது,” என்று ஸ்டார்பெரி தலைமை செயல் அதிகாரி எவான் லீ தெரிவித்துள்ளார்.
மனிதர்களுடன் மிக நேர்த்தியாக பழகுவதற்கு ஏற்றார்போல் இந்த பொம்மைகளில் அதிநவீன சென்சார்கள் மற்றும் ஏஐ தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. இதனால் இந்த பொம்மைகள் ஓரிடத்தில் இருந்து நகரவும், உரையாடவும் செய்யும். இது பயனர்களுக்கு தற்போதுள்ள பொம்மைகளை விட உண்மையான அனுபவத்தை வழங்கும்.
செக்ஸ் பொம்மைகளில் ஏஐ தொழில்நுட்பத்தை புகுத்துவதன் மூலம், மனிதர்களுக்கு ஏஐ துணையை உருவாக்குவது தான் நோக்கம் ஆகும். தொழில்நுட்ப சவால்கள் இருப்பினும், கிட்டத்தட்ட மனிதர்களை போன்றே ஏஐ பொம்மைகளை உருவாக்க வைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது கனவாக இருக்கும் இந்த திட்டத்தை விரைவில் உண்மையாக்க ஸ்டார்பெரி தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…