Connect with us

latest news

எங்கேயும் டச்..எதிலும் டச்..கீபோர்டு யூஸ் பண்ணி போர் அடிக்குதா?..அப்போ இந்த லேப்டாப்லாம் உங்களுக்குதான்..

Published

on

touch screen laptops

இந்த காலத்தில் மாணவர்கள் முதல் பெரிய டெக்னாலஜி நிறுவனங்களில் வேலைபார்ப்பவர்கள் வரை அனைவருக்கும் தேவையான ஒரு எலக்ட்ரானிக்ஸ் பொருள் லேப்டாப்தான். இதனை எங்கு சென்றாலும் நாம் எளிதில் கொண்டு செல்லும் வகையில் இருப்பதுதான் இதனை மக்கள் விரும்ப காரணமாக அமைகிறது. மேலும் இதன் எளிமையான அமைப்பு குறைந்த எடை போன்ற காரணங்களும் இதில் அடங்கும். ஆரம்பத்தில் கீபோர்டு முறையில் வந்த மடிகணினிகள் அனைத்துமே தற்போது டெக்னாலஜி முன்னேற்றத்தினால் டச் அமைப்பி வருகிறது. அப்படிப்பட்ட லேம்டாப்களின் விலை எவ்வளவு என்பதனை இப்போது அலசி ஆராயலாமா?.

1.ASUS Vivobook S14:

ASUS Vivobook s14

ASUS Vivobook s14

இந்த வகை லேப்டாப்கள் மிக சிறந்த டச் ஸ்கிரின் அமைப்பை கொண்டுள்ளன. இதன் அழகான தோற்றமும் மற்றும் இதன் மெல்லிய அமைப்பும் இதனை வாங்க சொல்லும். இந்த லேப்டாப்பில் AMD Ryzen 5 ப்ராஸசர் இருப்பதனால் இதன் வேகம் அதிகமாகவே இருக்கும். மேலும் இது 16ஜிபி RAM வசதியை கொண்டிருப்பதால் நாம் நமது கோப்புகளை எளிமையாக சேமிக்க முடியும்.

விலை: ரூ.61,990

2.Samsung Galaxy Book2:

samsung galaxy book2

samsung galaxy book2

இந்த டச் லேப்டாப் AMOLED திரையுடன் பார்ப்பவர்களின் கண்களுக்கு மிக குளிர்ந்த அனுபவத்தை கொடுக்கும். மேலும் Fingerprint Sensor-னால் நாம் மிக விரைவாக லாகின் செய்து கொள்ளலாம். மேலும் இதில் Backlit  கீபோர்டும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

திரை: 13.3 இன்ச்(1920/1080)

விலை: ரூ.94,990

3.Hp Pavilion X360 11th Gen:

HP Pavilion X360 11th Gen

HP Pavilion X360 11th Gen

AMD Ryzen ப்ராஸசரை கொண்ட இந்த லேப்டாப்பானது 16ஜிபி RAM மற்றும் 512 ஜிபி இண்டெர்னல் ஸ்டோரேஜையும் கொண்டுள்ளது. இதிலும் Fingerprint வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

திரை: 14 இன்ச் FHD

விலை: 51,990.

4.Microsoft Surface Laptop:

Microsoft surface laptop

Microsoft surface laptop

இதன் மெல்லிய அமைப்பு இதனை அனைவரும் கவரும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.

இது Core i5 ப்ராஸசரை கொண்டுள்ளது. ஆனால் இதன் பேட்டரி திறன் மற்றதை காட்டிலும் சற்று குறைவுதான்.

திரை:13.4இன்ச்

விலை: ரூ.44,990

5.HP Chromebook x360:

HP Chromebook x360

HP Chromebook x360

மிக சிறந்த திரை அமைப்பினை கொண்ட இந்த மடிகணினியானது செலிரான் ப்ராஸசரை கொண்டுள்ளது.

திரை: 14 இன்ச்

விலை: ரூ.27,990.

6.Lenovo  Ideapad Slim 3:

Lenovo Ideapad Slim3

Lenovo Ideapad Slim3

மிக சிறந்த பேட்டரி திறனை கொண்ட இந்த லேப்டாப்பை 8 மணி நேரம் வரையிலும் கூட உபயோகப்படுத்தலாம். இதில் AMD Ryzen-7 ப்ராஸசர் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

திரை: 15.6 இன்ச் FHD

விலை: ரூ.24,990

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *