tech news
டிமென்சிட்டி 7300 SoC, 8GB வரை ரேம்.. CMF பிரான்ட்-இன் முதல் போன் அறிமுகம் – விலை எவ்வளவு தெரியுமா?
நத்திங் நிறுவனத்தின் துணை பிரான்ட் CMF இந்திய சந்தையில் தனது முதல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. CMF போன் 1 என்று அழைக்கப்படும் இந்த மாடலில் 6.67 இன்ச் FHD+ 120Hz Super AMOLED ஸ்கிரீன், மீடியாடெக் டிமென்சிட்டி 7300 பிராசஸர், அதிகபட்சம் 8GB ரேம், 8GB வரை விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த நத்திங் ஓஎஸ் 2.6 கொண்டிருக்கிறது. மேலும் இதற்கு 2 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்கிரேடுகளையும், 3 ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட்களையும் வழங்குவதாக நத்திங் தெரிவித்துள்ளது. புதிய CMF போன் 1 மாடலில் லைட் கிரீன், புளூ மற்றும் ஆரஞ்சு என மூன்று நிறங்களில் கஸ்டமைஸ் செய்து கொள்ளும் பேக் கவர் வழங்கப்படுகிறது.
இதில் புளூ மற்றும் ஆரஞ்சு நிற வேரியண்ட்களில் வீகன் லெதர் ஃபினிஷ் செய்யப்பட்டு உள்ளது. பயனர்கள் இதன் மூலம் பேக் கேஸ் மீது இருக்கும் ஸ்கிரூக்களை கழற்றி வேறு நிறம் கொண்ட பேக் கவர்களை பொருத்திக் கொள்ள முடியும். இத்தடன் அக்சஸரி பாயின்ட் கவரின் ஸ்கிரூக்களை கழற்றி Fold out ஸ்டான்ட், கார்டு ஹோல்டர் அல்லது லேன்யார்ட் உள்ளிட்டவைகளை பொருத்திக் கொள்ளலாம்.
நத்திங் போன்களில் உள்ள க்ளிம்ஃப் இன்டர்பேஸ் இந்த மாடலில் வழங்கப்படவில்லை. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, போர்டிரெயிட் லென்ஸ் மற்றும் 16MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 33W சார்ஜிங் வசதி உள்ளது. இந்த ஸ்மார்ட்போனுடன் சார்ஜர் வழங்கப்படவில்லை.
விலையை பொருத்தவரை CMF போன் 1 மாடலின் 6GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 15,999 என்றும் 8GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 17,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ப்ளிப்கார்ட் வலைதளத்தில் ஜூலை 12 ஆம் தேதி துவங்குகிறது.