tech news
பவர்ஃபுல் பிராசஸருடன் CMF போன் 1 – சூப்பர் டீசர் வெளியீடு
நத்திங் நிறுவனத்தின் துணை பிராண்டு CMF, தனது புதிய ஸ்மார்ட்போன் மாடலை ஜூலை 8 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுடன் CMF பட்ஸ் ப்ரோ 2 மற்றும் CMF வாட்ச் ப்ரோ 2 சாதனங்களும் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
இதனிடையே புதிய சாதனங்களுக்கான டீசர்களை CMF தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் வெளியாகி இருக்கும் டீசரில், புதிய CMF போன் 1 மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 7300 பிராசஸர் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 8GB ரேம் வழங்கப்படும் என்றும் இதில் 6.67 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படும் என்று தெரிவித்து இருக்கிறது.
மீடியாடெக் டிமென்சிட்டி 7300 5ஜி சிப்செட் ஆக்டா கோர் பிராசஸர் ஆகும். இது சமீபத்திய டெஸ்டிங்கில் ஸ்னாப்டிராகன் 782G-ஐ விட சிறப்பாக செயல்பட்டு அசத்தியது. டிமென்சிட்டி 7300 பிராசஸர் TSMC-இன் 4nm ஜென் 2 முறையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது ஸ்மார்ட்போனில் ப்ளூடூத் 5.3, வைபை 6, டூயல் 5ஜி கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை வழங்கும்.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி CMF போன் 1 மாடலில் 50MP பிரைமரி கேமராவுடன் மற்றொரு லென்ஸ் மற்றும் 16MP செல்பி கேமரா வழங்கப்படும் என்று தெரிகிறது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் IP52 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இதன் விலை ரூ. 20 ஆயிரத்திற்கும் குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.