latest news
ரூ. 500-க்கு கிடைக்கும் கியாஸ் சிலிண்டர் பற்றி தெரியுமா?
இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்ப வேறுபடும். தற்போது இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை சுமார் 800 ரூபாயில் துவங்குகிறது.
தொடர்ச்சியாக கியாஸ் விலை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கப்பட்டு வருவதால், ஏழை எளியோரால் கியாஸ் வாங்க முடியாத நிலை உருவாகி இருக்கிறது. மேலும், பலர் கியாஸ் விலை உயர்வு காரணமாக மின்சார அடுப்பு, இதர மாற்று எரிசக்தியை சமையல் பயன்பாடுகளுக்கு பயன்படுத்த துவங்கிவிட்டனர்.
இந்த நிலையில், ரூ. 500-க்கும் குறைந்த விலையில் சமையல் கியாஸ் சிலிண்டர் வாங்க முடியும் என்று உங்களுக்கு தெரியுமா? நாட்டில் மெல்ல பயன்பாட்டுக்கு வந்துக் கொண்டிருக்கும் புதிய வகை சிலிண்டர் ரூ. 500-க்கும் குறைந்த விலையில் கிடைக்கிறது.
குறைந்த விலையில் கிடைக்கும் இந்த சிலிண்டர்கள் ‘கம்போசிட் சிலிண்டர்” என அழைக்கப்படுகிறது. சாதாரண சமையல் கியாஸ் சிலிண்டர் எடை 14.2 கிலோ எடை கொண்டிருக்கும் நிலையில், கம்போசிட் சிலிண்டர்களின் எடை 10 கிலோவாக இருக்கும். குறைந்த விலை காரணமாக இதன் எடை குறைவாக இருக்கிறது. மேலும், இந்த சிலிண்டர்கள் மிக பாதுகாப்பாக உருவாக்கப்படுகின்றன.
மேலும், இதன் வடிவமைப்பு மற்றும் குறைந்த எடை காரணமாக இவற்றை எளிதில் தூக்க முடியும். இந்த சிலிண்டரில் கியாஸ் எவ்வளவு மீதம் இருக்கிறது. எப்போது கியாஸ் தீர்ந்து போகும் என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும். கியாஸ் சிலிண்டர் தீர்ந்து போனாலும், இவற்றை உடனே பெற்றுக் கொள்ள முடியும்.