Connect with us

latest news

விரைவில் அமைச்சரவை கூட்டம்.. அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் குட் நியூஸ்.. புது அப்டேட்

Published

on

இந்தியாவில் பல லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கின்றனர். இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படியை உயர்த்தி வருகிறது. அதன்படி அரசு ஊழியர்கள் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை அகவிலைப்படி உயர்வில் பயன்பெற்று வருகின்றனர்.

இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில், விரைவில் மத்திய அமைச்சரவை கூட உள்ளதாக கூறப்படுகிறது.

இன்னும், ஒரிரு வாரங்களில் கூடும் மத்திய அமைச்சரவையில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன. இதில், ஏழாவது ஊதியக்குழுவின்படி டிஏ, டிஆற் அதிகரிப்பது பற்றி முடிவு எடுக்கப்படலாம். ஒருவேளை அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் கூட்டம் நடந்தால், நவராத்திரி நேரத்தில் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு பற்றி செய்தி வந்து சேரும்.

ஒருவேளை தாமதமாகும் பட்சத்தில் கூட இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு முன் அகவிலைப்படி உயர்வு குறித்த தகவல் வந்துவிடும் என்று தெரிகிறது. அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தொழில்துறை தொழிலாளர்களின் நுகர்வோர் விலை குறியீட்டின் (ஏஐசிபிஐ) அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டின் அடிப்படையில், ஜூலை 2024-க்கான டிஏ மூன்று முதல் நான்கு சதவீதம் வரை உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை 53 முதல் 54 சதவீதமாக உயரும். அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு எப்போது வெளியானாலும், ஜூலை மாதம் துவங்கி டிஏ அரியர் தொகை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சேர்த்தே வழங்கப்படும்.

google news