latest news
ரூ. 2714 கோடி ஒதுக்கியாச்சு.. பெண்களுக்கு மாதம் ரூ. 1000.. வெளியான புது அப்டேட்
தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 1000 வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தைத் தொடர்ந்து பிற மாநிலங்களிலும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வெவ்வேறு பெயர்களில் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் சில மாநிலங்களில் இந்த திட்டம் தொடங்கி செயல்படுத்தப்பட்டும் வருகிறது.
இந்த வரிசையில், டெல்லியில் பெண்களுக்கு மாதம் ரூ. 1000 வழங்கும் மகிளா சம்மான் யோஜனா திட்டத்தை துவங்குவதற்கான பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்த திட்டம் டெல்லியின் முதல்வராக பதவியேற்றுள்ள அதிஷி மர்லினா அரசின் முதல் அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.
டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ. 1000 வழங்கும் திட்டத்தை அறிவித்து இருந்தார். எனினும், இதனை செயல்படுத்துவதற்குள் அவர் பதவி விலகியுள்ளதை அடுத்து இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இது குறித்து பேசிய டெல்லி முதல்வர் அதிஷி, “18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 1000 வழங்கும் ‘முக்ய மந்திரி மகிளா சம்மன் யோஜனா’ திட்டத்தை இன்று தொடங்குகிறோம் என்றார். இதற்காக பல துறைகளின் ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
எனினும், இந்த திட்டம் குறித்து கைலாஷ் கெலாட் புது தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி, இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான நிதி ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டதாம். பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள டெல்லி தேர்தலுக்கு முன் இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்திற்காக டெல்லி அரசு ரூ. 2,714 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.