Connect with us

latest news

போன்பெயில் கேஷ்பேக் கொடுப்பதாக போலீசிடம் கைவரிசை.. ரூ. 2 லட்சம் சுருட்டிய கும்பல்!

Published

on

Cyber-Security

தொழில்நுட்ப வசதிகள் நமக்கு எந்த அளவுக்கு பயனுள்ளதாக மாறி வருகிறதோ, அதே அளவுக்கு அவை நமக்கு பாதிப்பையும் ஏற்படுத்த பயன்படுத்தப்பட்டு வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகத்திற்கு இணையாக, ஹேக்கர்களும் அதன் மூலம் பாதிப்பை ஏற்படுத்துவதற்கான வழிமுறைகளை கண்டறிந்து விடுகின்றனர்.

அந்த வரிசையில் தான் வித்தியாசமான சைபர்குற்றத்தில் காவல் துறை அதிகாரி ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். சைபர் குற்ற செயல்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தி வரும் போலீஸ் துறையை சேர்ந்த அதிகாரியே இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த முறை கேஷ்பேக் சலுகை வழங்கப்படுவதாக தனக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து டெல்லி காவல் துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் ரூ. 2 லட்சத்திற்கும் அதிகமான தொகையை இழந்துள்ளார். காவல் துறை அதிகாரி எப்படி ஏமாற்றப்பட்டார் என்ற விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

hack

hack

– தனக்கு அறிமுகம் இல்லாத எண்ணில் இருந்து காவல்துறை அதிகாரிக்கு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் காவல் துறை அதிகாரிக்கு கேஷ்பேக் சலுகை வழங்கப்பட்டு இருப்பதாகவும், அவர் போன்பெ மூலம் பண பரிவர்த்தனை செய்தால் அதனை பெற்றுக் கொள்ள முடியும் என்று அறிவித்து இருக்கிறார். மேலும் கேஷ்பேக்கை பெற, மற்றொரு வித்தியாசமான செயலியை டவுன்லோடு செய்ய மர்ம நபர் போலீஸ் அதிகாரியிடம் வலியுறுத்தி இருக்கிறார்.

இந்த சம்பவத்தில் போன்பெ கொண்டு ஏமாற்றாமல், இந்த செயலியை கொண்டு போலீஸ் அதிகாரியை ஏமாற்றியுள்ளனர். இதுபோன்ற செயலிகள் ஏராளமான கேஷ்பேக் சலுகைகள் வழங்குவதை வாடிக்கையாக கொண்டிருப்பதால், இந்த சலுகையை நம்பியதாக போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

செயலியை டவுன்லோடு மற்றும் இன்ஸ்டால் செய்யு்ம போது, ஹேக்கர்கள் போலீஸ் அதிகாரியின் ஸ்மார்ட்போனினை முழுமையாக இயக்கும் வசதியை பெற்றுள்ளனர். இதன் பிறகு போலீஸ் அதிகாரி வங்கி கணக்கு மற்றும் கிரெடிட் கார்டில் இருந்து ரூ. 2 லட்சத்து 12 ஆயிரம் தொகையை எடுத்துள்ளர்.

hack

hack

இந்த சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரனை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நான்கு பேரை பிடித்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரனையில் ஹேக்கர்கள் பணத்தை டிஜிட்டல் வாலெட்டிற்கு மாற்றியது தெரியவந்துள்ளது.

அந்த டிஜிட்டல் வாலெட்டில் உத்திர பிரதேசம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களை சேர்ந்த சுமார் ஐந்து வங்கி கணக்குகள் இணைக்கப்பட்டு இருந்தன. இந்த சம்பவம் தொடர்பாக கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதோடு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, அவர்கள் ஏமாற்றிய தொகையை போலீசார் மீட்டனர்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *