Categories: latest newstech news

இது ஆஃபர் மேல ஆஃபரால இருக்கு… குறைந்த விலையில் Redmi 5ஜி ஸ்மார்ட்போன்… வேகமா அள்ளுங்க..!

அமேசான் தளத்தில் தற்போது சிறப்பு விற்பனை நடைபெற்று வருகின்றது. இந்த விற்பனையில் மிகவும் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட செல்போன் ரெட்மி 13 5g. இந்த ஸ்மார்ட்போனுக்கு தற்போது தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக புல் எச்டி டிஸ்ப்ளே, பாஸ்ட் சார்ஜிங் வசதி, 108 எம்பி கேமரா வசதியுடன் கூடிய இந்த செல்போன் தற்போது சிறப்பான ஆஃபரில் வெளிவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் அதன் சிறப்பு அம்சங்கள் பற்றி இதில் நாம் தெரிந்து கொள்வோம்.

அமேசான் சிறப்பு விற்பனையில் ரெட்மி 13 5g ஸ்மார்ட்போனுக்கு 25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த செல்போன் தற்போது 13,499 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது. அது மட்டும் இல்லாமல் இந்த போனுக்கு 1000 ரூபாய் கூப்பன் சலுகையும் கிடைத்துள்ளது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட் போன் 12,499 ரூபாயில் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்தி வாங்கிக்கொள்ளலாம்.

ரெட்மி 13 5ஜி ஃபோனின் சிறப்பம்சங்கள்:

இந்த செல்போனில் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் (Snapdragon 4 Gen 2 Chipset) வசதி உள்ளது. மேலும் Hyper OS சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. இருப்பினும் இந்த செல்போனில் ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும்.

அது மட்டும் இல்லாமல் அட்ரினோ 613 ஜிபியு கிராபிக்ஸ் சப்போர்ட் கொண்டுள்ளது. 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி உடன் இந்த ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த செல்போனில் இருக்கின்றது.

6.79-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதி, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 550 நிட்ஸ் பிரைட்னஸ் வசதி மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இந்த செல்போனில் டிஸ்ப்ளேவில் சிறப்பம்சமாக சேர்க்கப்பட்டுள்ளது.

பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று பலரும் கூறி வருகிறார்கள்.

இந்த செல்போனில் 5030mAh பேட்டரி வசதிகள் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலையே இருக்காது. ஏனென்றால் இந்த செல்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

அடுத்ததாக 108எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்று பிரத்தியேகமாக 13எம்பி கேமரா சேர்க்கப்பட்டுள்ளது. எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களும் உள்ளன.

ரெட்மி 13 5ஜி போனில் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் மற்றும் இன்பிராரெட் சென்சார் ஆதரவுகள் இருக்கின்றன. மேலும், 3.5எம்எம் ஆடியோ ஜாக், எஸ்ஏஃஎன்எஸ்ஏ , டூயல் 4ஜி வோல்ட்இ, வை-பை 806.11 ஏசி , ஜிபிஸ், புளூடூத் 5.1, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி போன்ற பல்வேறு வசதிகள் இந்த செல்போனில் உள்ளது.

இத்தகைய பல்வேறு சிறப்பு அம்சங்கள் கொண்ட ரெட்மி 13 5ஜி செல் போனை குறைந்த விலையில் நீங்கள் அமேசானில் பெற்றுக்கொள்ள முடியும் தற்போது வழங்கக்கூடிய ஆப்பரை பயன்படுத்தி விரைவில் இந்த செல்போனை வாங்கிக் கொள்ளுங்கள்.

Ramya Sri

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

3 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

3 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

3 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

3 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

3 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

3 weeks ago