Flipkart தளத்தில் இன்று முதல் பிக் தீபாவளி சேல் தொடங்கிய நடைபெற்று வருகின்றது. ஏராளமான செல்போன்கள் தள்ளுபடி விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. அதில் பலரும் எதிர்பார்த்த சாம்சங் 5g செல்போன் தள்ளுபடி விலையில் வழங்கப்பட்டுள்ளது. ப்ளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் samsung galaxy a15 ஸ்மார்ட்போன்க்கு சூப்பரான ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 22 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு 15,499 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
அது மட்டும் இல்லாமல் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்களை பயன்படுத்தினால் மேலும் ஐந்து சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகின்றது. இந்த செல்போனை வாங்கிட இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும்.
சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி செல்போனின் சிறப்பம்சங்கள்:
இந்த செல்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 6100 சிப்செட் வசதியைக் கொண்டது. இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல் திறன் வழங்கும். மேலும் ஒன் யுஐ 6 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த செல்போன் வெளிவந்திருக்கின்றது.
இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்டுகளும் கிடைக்கின்றன. அது மட்டும் இல்லாமல் 6.5-இன்ச் AMOLED டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளது. மேலும் 2340 x 1080 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 800 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியும் இதில் இருக்கின்றது. இந்த செல்போனில் டிஸ்ப்ளே ஒரு சிறந்த துறை அனுபவத்தை கொடுக்கும் என்று கூறப்படுகின்றது.
அடுத்ததாக 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி மாடல் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவும் இந்த ஸ்மார்ட்போனில் இருக்கின்றது. நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
50எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 5எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் லேயர் கேமரா வசதியை கொண்டிருக்கின்றது. அதுமட்டுமில்லாமல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவும் இந்த செல்போனில் இருக்கின்றது.
மேலும் சிறப்பம்சமாக எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா வசதிகளும் இதில் இருக்கின்றன. இதனை பயன்படுத்தி அசத்தலான படங்களை எடுக்க முடியும்.
அடுத்ததாக பேட்டரி, 5000mAh பேட்டரி உடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கின்றது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும். மேலும் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த சாம்சங் போன் வெளிவந்துள்ளது. அதேபோல சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் வசதியும் இதில் இருக்கின்றது.
இதைத்தொடர்ந்து டூயல் சிம், 5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.3, ஜிஎன்எஸ்எஸ், 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி போன்ற பல சிறப்பம்சங்கள் போனில் உள்ளன.
மேலும் இந்த செல்போன் ப்ளூ, பிளாக், ப்ளூ மற்றும் லைட் ப்ளூ நிறங்களில் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்திருக்கின்றது குறிப்பிடத்தக்கது இந்த ஆஃபரை பயன்படுத்தி சாம்சங் கேலக்ஸி a15 ஸ்மார்ட்போனை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்..
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…