டுகாட்டி இந்தியா நிறுவனம் தனது தேர்வு செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள் மாடல்களை வாங்குவோருக்கு குறுகிய கால சலுகையை அறிவித்து இருக்கிறது. இவை டுகாட்டி இந்தியாவின் பத்தாவது ஆண்டு விழா கொண்டாட்டங்களின் அங்கமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சலுகையின் கீழ் டுகாட்டி இந்தியா தேர்வு செய்யப்பட்ட மாடல்களை வாங்குவோருக்கு ரூ. 4 லட்சம் வரையிலான பலன்களை வழங்குகிறது.
இந்திய சந்தையில் டுகாட்டி நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் அட்வென்ச்சர் டூரர், மல்டிஸ்டிராடா வி4 மற்றும் பனிகேல் வி4 மாடலை சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கும் ஸ்டிரீட்ஃபைட்டர் வி4 ரோட்ஸ்டர் மாடல்களுக்கு ரூ. 4 லட்சம் வரையிலான பலன்களை வழங்குகிறது. இத்துடன் மான்ஸ்டர், ஸ்டிரீட்ஃபைட்டர் வி2 மற்றும் மல்டிஸ்டிராடா வி2 போன்ற மாடல்களை வாங்குவோருக்கு ரூ. 2 லட்சம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது.
இத்தாலி நாட்டை சேர்ந்த டுகாட்டி நிறுவனம் அறிவித்து இருக்கும் பலன்கள் அனைத்தும் ஸ்டோர் கிரெடிட் முறையில் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. இதனை பயனர்கள் டுகாட்டி ஆடை மற்றும் வாடிக்கையாளர் வாங்கும் மோட்டார்சைக்கிளுக்கான அக்சஸரீக்களை வாங்க பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சலுகைகள் ஸ்டாக் இருக்கும் வரை மட்டுமே வழங்கப்படும் என்று டுகாட்டி இந்தியா அறிவித்து இருக்கிறது.
சமீபத்தில் தான் டுகாட்டி இந்தியா நிறுவனம் தனது மான்ஸ்டர் எஸ்பி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதில் ஸ்டாண்டர்டு மாடலில் இருப்பதை விட கூடுதல் உபகரணங்கள் வழங்கப்படுகிறது. புதிய டுகாட்டி மான்ஸ்டர் எஸ்பி மாடலின் விலை இந்திய சந்தையில் ரூ. 15 லட்சத்து 95 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது ஸ்டாண்டர்டு மாடலை விட ரூ. 3 லட்சம் வரை விலை அதிகம் ஆகும்.
மான்ஸ்டர் எஸ்பி வேரியண்டில் ஆலின்ஸ் சஸ்பென்ஷன் செட்டப், மோட்டோ ஜிபி சார்ந்த லிவரி மற்றும் பயணர் சீட் கவுல் வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் மான்ஸ்டர் சீரிஸ் மாடல்கள் டிரையம்ப் ஸ்டிரீட் டிரிபில் ஆர்எஸ், பிஎம்டபிள்யூ எஃப் 900 ஆர் மற்றும் கவாசகி இசட்900 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. இந்திய சந்தையில் டுகாட்டி அறிமுகம் செய்ய இருக்கும் ஒன்பது மாடல்களில் ஒன்றாக புதிய மான்ஸ்டர் எஸ்பி அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த பட்டியலில் டயவெல் வி4, ஸ்டிரீட்ஃபைட்டர் வி4 எஸ்பி2 மற்றும் ஸ்டிரீட்ஃபைட்டர் லம்போர்கினி, மல்டிஸ்டிராடா வி4 ரேலி மற்றும் ஸ்கிராம்ப்ளர் மாடல்களும் அடங்கும்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…