Connect with us

latest news

அதிகமாக Chrome யூஸ் பண்றீங்களா?..அப்போ உடனே இத செட் பண்ணுங்க..

Published

on

enable these settings for safe browsing

பல வித வெப் பிரவுஸர்கள் இருந்தாலும் மக்கள் பெரும்பாலும் அதிகமாக உபயோகிப்பது கூகுள் குரோம் தான். இதன் மூலம் நாம் எந்த விஷயங்களையும் எளிதில் தேடிக்கொள்ளலாம். தற்போது டெக்னாலஜி வளர்ந்துவிட்ட நிலையில் நாம் இந்த மாதிரியான தளங்களை மிகவும் கவனமுடன் கையாள வேண்டியிருக்கிறது. இல்லையென்றால் சில மோசடியாளர்கள் நமது அக்கெளண்டில் உள்ள தகவல்களை திருட நேரிடும். எனவே அதற்கு நாம் நமது கூகுள் குரோமில் உள்ள செட்டிங்கில் சில செட்டிங்குகளை மாற்றுவதன் மூலம் இது மாதிரியான அபாயங்களை தவிர்க்கலாம்.

did not allow hack our information

did not allow hack our information

எவ்வாறு  மாற்றுவது:

  1. முதலில் கூகுள் குரோமில் சென்று அதன் மேல்பக்கமாக வலப்புறத்தில் உள்ள மூன்று புள்ளிகள் உள்ள பட்டனை அழுத்தவும்.
  2. பின் “setting”-க்கு சென்று அதில் “Privacy &Security” என்ற பட்டனை அழுத்தவும்.
  3. பின் அதனுள் உள்ள “Safe browsing” க்கு உள் சென்று அதில் “Enhanced Protection Mode” என்ற பட்டனை அழுத்தவும்
  4. பின் அதற்கு முன் பக்கத்திற்கு சென்று “Always use secure connection” என்ற பட்டனை அழுத்தவும்.

இவ்வாறு செய்வதனால் நாம் ஏதாவது அபாயமான வெப்சைட் உள் செல்லும் போது அது நமக்கு எச்சரிக்கை செய்தியை அனுப்பும். மேலும் மோசடி கும்பல்கள் நமது கடவு சொல் சம்பந்தமான தகவல்களையும் நமக்கு தெரியாமல் எடுக்க இயலாது. இவ்வாறு செய்வதன் மூலம் நமது மொபைலில் உள்ள தகவல்களை நாம் பாதுகாப்பாக வைத்து கொள்ளலாம்.

google news