Categories: latest newstech news

மூளையில் சிப் பொருத்தும் முறை – மனிதர்களிடையே சோதனை நடத்தும் எலான் மஸ்க்-இன் நியூராலின்க்!

உலகின் முன்னணி பணக்கக்காரர் எலான் மஸ்க் மனித மூளையில் சிப் பொருத்தும் தனது ஸ்டார்ட்அப் நியூராலின்க் நிறுவனம் மனிதர்களிடையே பரிசோதனை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றிய அறிவிப்பை எலான் மஸ்க் பிரான்சில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.

பாரிசில் நடைபெற்ற விவாடெக் நிகழ்வில், நியூராலின்க் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க், மனித மூளையில் டெட்ராகிராஃபிக் அல்லது பாராப்லெஜிக் நோயாளிகளின் மூளையில் சிப் பொருத்த திட்டமிடுவதாக தெரிவித்துள்ளார். எனினும், எத்தனை நோயாளிகளிடம் இந்த பரிசோதனை நடத்தப்படும் என்றும், எவ்வளவு காலம் நடத்தப்படும் என்பது பற்றியும் எந்த தகவலும் வழங்கவில்லை.

Neuralink-Implant

“இந்த ஆண்டு இறுதிக்குள் முதல் நோயாளியிடம் இந்த பரிசோதனை நடத்தப்பட இருக்கிறது,” என எலான் மஸ்க் தெரிவித்து உள்ளார். கடந்த மாதம் நியூராலின்க் நிறுவனம் அமெரிக்க உணவு மற்றும் மருத்துவ ஆணையம் (FDA) மனிதர்களிடம் பரிசோதனை நடத்துவதற்கான அனுமதியை வழங்கியது. முன்னதாக விலங்குகளிடம் நடத்தப்பட்ட பரிசோதனையை ஆய்வு செய்த FDA, பரிசோதனையை மனிதர்களிடம் நடத்த அனுமதி அளித்துள்ளது.

மனிதர்களின் மூளையில் சிப் பொருத்துவது மற்றும் அறுவை சிகிச்சைக்கு ரோபோட்களை பயன்படுத்த நியூராலின்க்-க்கு அனுமதி அளித்து இருக்கிறோம் என்று FDA ராய்ட்டர்ஸ்-க்கு அனுப்பிய அறிக்கையில் தெரிவித்து இருக்கிறது. எனினும், இதுபற்றிய கூடுதல் விவரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. பரிசோதனையின் போது நியூராலின்க் தனது சாதனம் மனிதர்களுக்கு பாதுகாப்பானது என்று நிரூபிக்கப்பட்டால், இனினும் பல ஆண்டுகள் அல்லது தசாப்த காலக்கட்டத்தில் வர்த்தக ரீதியில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

Neuralink-Surgical-Robot

தற்போது மருத்துவ பரிசோதனைக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கும் நிலையில், வர்த்தக ரீதியிலான பயன்பாட்டுக்கு அனுமதி பெறுவதும் அவசியம் ஆகும். இந்த துறையில் நியூராலின்க் நிறுவனம் மற்றொரு நியூராடெக் நிறுவனங்களுடன் போட்டியை எதிர்கொண்டு இருக்கிறது. மற்ற நிறுவனங்களும் நியூராலின்க் போன்றே மனித மூளையில் தங்களின் சாதனங்களை பொருத்துவதற்கு முயற்சித்து வருகின்றன.

2019 முதல் பல சமயங்களில் நியூராலின்க் நிறுவனம் தனது திட்டங்கள் பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டு, பின் அவற்றை நிறைவேற்ற தவறி இருக்கிறது. எலான் மஸ்க், தனது நியூராலின்க் விரைவில் மனிதர்களிடையே பரிதோதனை நடத்த இருப்பதாக பல சமயங்களில் அறிவித்து இருக்கிறார். 2016-ம் ஆண்டு துவங்கப்பட்ட நியூராலின்க் நிறுவனம் கடந்த ஆண்டு துவக்கத்தில் FDA-விடம் இருந்து அனுமதி பெற்றது. எனினும், பாதுகாப்பு காரணங்களுக்காக அனுமதி ரத்து செய்யப்பட்டது.

admin

Recent Posts

ரேஷன் கார்டுடன் மொபைல் நம்பர் லின்க் செய்வது இவ்வளவு ஈசியா?

தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு ரேஷன் அட்டைகளை வழங்கியிருக்கிறது. ரேஷன் அட்டை வைத்திருப்போர் ஒவ்வொரு மாதமும், அரிசி,…

3 hours ago

நாலு நாளைக்கு நச்சு எடுக்கப் போகுதா மழை?…அப்போ அலர்டா இருக்கனுமா?…

தமிழகத்தை புரட்டி எடுத்து வந்த வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து மழை பெய்யத் துவங்கியுள்ளது. மாநிலத்தின் அனேக மாவட்டங்களில் அவ்வப்போது…

3 hours ago

பி.எஃப் பணத்தை எடுக்கப் போறீங்களா? அப்போ இதை தெரிஞ்சிக்கோங்க..

வருங்கால வைப்பு நிதியை (பி.எஃப்) தனிப்பட்ட காரணங்களுக்கு எடுத்துக் கொள்வோருக்கு நல்ல செய்தி வெளியாகி உள்ளது. அந்த வகையில் பி.எஃப்.…

3 hours ago

தற்கால வீரர்களில் இவர் மட்டும் தான்.. மிரட்டி விட்ட விராட்..!

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி. தான் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும், புதிய சாதனை படைப்பதை விராட்…

4 hours ago

குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் கோவிலில் கொடியேற்றம்..பன்னிரெண்டாம் தேதி சூரசம்ஹாரம்…

நவராத்தி நாட்களில் மாலை அணிவித்து அம்மனுக்கு விரதமிருந்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி வருபவர்கள் பலரும் உண்டு. வீடுகளில் கொலு வைத்து…

4 hours ago

இலங்கை வீரருக்கு ஓராண்டு தடை – ICC

இலங்கை அணி கிரிக்கெட் வீரருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. ஒரு ஆண்டு விளையாடுவதற்கு தடை விதித்த சம்பவம் பரபரப்பை…

4 hours ago