உலகின் முன்னணி சமூக வலைதளம் எக்ஸ் தனது ஐஓஎஸ் செயலியில் டிஸ்லைக் பட்டனை விரைவில் கொண்டுவர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவ்வாறு செய்வதன் மூலம் தளத்தில் பயனர்களை அதிகளவில் ஈடுபாடு கொள்ள வைக்க முடியும் என்று கூறப்படுகிறது.
இது குறித்து சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ள தகவல்களில் எக்ஸ் தளத்தில் டிஸ்லைக் பட்டன் உடைந்துபோன இதயத்தை குறிப்பது போன்ற ஐகான் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. முன்னதாக இது பற்றிய தகவல்கள் 2021 ஆம் ஆண்டே வெளியாகி இருந்த நிலையில், இதனை உறுதிப்படுத்தும் விவரங்கள் எக்ஸ் தள குறியீடுகளில் இடம்பெற்று இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
எக்ஸ் தளத்தின் ஐஓஎஸ் வெர்ஷனில் விரைவில் பதிவுகளுக்கு டிஸ்லைக் செய்யு்ம வசதி வழங்கப்படலாம் என்று எக்ஸ் தள பதிவில் ஆரோன் என்பவர் தெரிவித்துள்ளார். இதனை உறுதிப்படுத்தும் வகையில், அவர் எக்ஸ் தள குறியீடுகளின் ஸ்கிரீன்ஷாட்களை பகிர்ந்துள்ளஆர். அதில் டிஸ்லைக் பட்டன் உடைந்த நிலையில் உள்ள இதய ஐகான் கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.
2021 ஆம் ஆண்டு டுவிட்டர் பெயரில் இயங்கி வந்த எக்ஸ் தளம், பதிவுகளுக்கு டிஸ்லைக் செய்யும் வசதி ஐஓஎஸ் வெர்ஷில் டெஸ்டிங் செய்யப்படுவதாக அறிவித்து இருந்தது. இது குறித்து வெளியான மற்றொரு தகவலில் எக்ஸ் தளத்தில் டிஸ்லைக் செய்யும் வசதி நேரடியாக பதிவுகளுக்கு வழங்கப்படாமல், பதிவுக்கு ஒருவர் அளிக்கும் பதிலுக்கு மட்டும்தான் வழங்கப்படலாம் என்று தெரிவித்துள்ளார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…