Connect with us

latest news

ஐபோன் வச்சிட்டு பவர்பேங்க் இல்லனா எப்படி…இத பாருங்க..கம்மி விலையில கெத்தான பவர்பேங்க்..

Published

on

ambrane aerosync pb10

நாம் வெளியூர் செல்லும் நேரங்களிலோ அல்லது முக்கியமான கால்களில் இருக்கும் போதோ  சில சமயங்களில் நமது போனில் சார்ஜ் இல்லாமல் போய்விடிவதினால் நமக்கு யாரையும் தொடர்பு கொள்ள இயலாமல் போய்விகிறது. இத்தகைய சமயங்களில் நமக்கு பவர் பேங்க்-ஆனது உதவும். இதன் மூலம் நாம் நமது போன்களில் சார்ஜ் ஏற்றி கொள்ள இயலும். தற்போது இந்த பிரச்சினையை சரிசெய்ய Ambrane Aerosync PB10 என்ற பவர்பேங்க் சந்தையில் அறிமுகமாகியிருக்கிறது.

charging technology

charging technology

இதில் magsafe  எனப்படும் காந்த தன்மையுள்ள ஒரு வசதி உள்ளது. இதன் மூலம் நமது ஐபோன்கள் தானாகவே இதன் மீது ஒட்டு கொள்ளும். இந்த பவர்பேங்க் வயர்லெஸ் முறையில் ஐபோன்களுக்கு சார்ஜ் ஏற்றுகிறது. Ambrane Aerosync PB10 பவர்பேங்க் நமக்கு 10000mAh பேட்டரி அமைப்புடன் கிடைக்கிறது.

இதன் விலை ரூ.1999 ஆகும். ஆனால் சில சில்லரை வணிக நிறுவனங்களின் இதன் மீதான ஆஃபர்களை வைத்து பார்க்கும் பொழுது இதன் விலை ரூ.1299க்கு கூட கிடைக்கிறது. அமேசானில் இதன் விலை ரூ.1599 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை இவ்வளவு அதிகம் என நினைத்தாலும் இது மிக அதீத திறனை கொண்டுள்ளது. இந்த பவர்பேங்க் ஐபோன்12 மற்றும் அதற்கும் அடுத்த மாடல்களுக்கு உபயோகப்படும்படி உருவாக்கப்பட்டுள்ளது.

magsafe feature

magsafe feature

இதனை நாம் Type-c சார்ஜரின் மூலம் சார்ஜினை ஏற்றி கொள்ளலாம். மேலும் இது 22.5வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியினையும் கொண்டுள்ளது. இதனை வயர்லெஸ் சார்ஜின் மூலம் 15 வாட் வேகத்தில் சார்ஜ் செய்து கொள்ளலாம். இதன் எடை 180 கிராம் என்பதால் நாம் எங்கு வேண்டிமானாலும் எளிமையாக எடுத்து செல்லலாம். எனவே இத்தகைய பவர் பேங்க் நம்முடன் இருந்தால் நாம் போனின் சார்ஜை பற்றி கவலை பட வேண்டிய அவசியமே இருக்காது.

google news