Connect with us

latest news

அடடா..நாளைக்கே ஆர்டர் போடலாம் போலயே..கம்மி ரேட்ல கட்சிதமான மொபைல்..

Published

on

infinix hot30 5g

இந்திய சந்தையில் ஸ்மார்ட் போன்கள் அவ்வப்போது வந்த வண்ணமே உள்ளன. இந்த வரிசையில் தற்போது Infinix Hot 30 மொபைலும் சேர்ந்துள்ளது. இந்த மொபைல் மிக குறைந்த விலையில் மிக அதிக அளவு வசதியினை கொண்டுள்ளது. இந்த மொபைலானது ஜுலை-18 முதல் இந்திய சந்தையில் கிடைகின்றது. இதனை நாம் ஃபிலிப்கார்ட்டில் பெற்று கொள்ளலாம்.

infinix hot 30 5g

infinix hot 30 5g

சேமிப்பு தன்மை(Storage):

Infinix Hot 30 மொபைலானது நமக்கு இரு வகைகளில் கிடக்கின்றது. ஒன்று 4ஜிபி+128ஜிபி மற்றும் 8ஜிபி+128ஜிபி என இரு வகைகளில் நமக்கு கிடைகின்றது. ஸ்டோரேஜ்களின் அடிப்படையில் விலையும் மாறுபடுகிறது.

விலை:

  • Infinix Hot 30 4ஜிபி+128ஜிபி: ரூ.12,499
  • Infinix Hot 30 8ஜிபி+128ஜிபி: ரூ.13,499

இந்த மொபைலை நாம் ஃபிலிப்கார்ட்டில் பெற்று கொள்ளலாம். ஆக்ஸிஸ் வங்கியின் கிரெடிட் கார்டுகளை உபயோகிப்பவர்களுக்கு துவக்க விழா சலுகையாக ரூ.1000 சலுகை அளிக்கப்படுகிறது.

மொபைலின் வண்ணங்கள்:

இந்த மொபைலானது Aurora Blue, Knight Black என்ற இரு வண்ணங்களில் நமக்கு கிடைக்கின்றது.

திரை:

Infinix Hot 30 5G  மொபைலானது 580 nits பிரகாசமான 6.7இன்ச் Full HD+ திரையுடனும் 120Hz refresh rate உடனும் நமக்கு கிடைக்கின்றது. இந்த வசதியானது பார்பவர்க்கு மிக சிறந்த அனுபவத்தினை அளிக்கிறது.

ப்ராசஸர்:

Infinix Hot 30 5G மொபைலானது MediaTek 6020 சிப்செட்டையும் Octa-core ப்ராஸசரையும் ஆண்டிராய்டு 13 OS-ஐயும் கொண்டுள்ளது.

கேமரா:

camera feature

camera feature

இதன் பின்புறத்தில் 50MP கேமராவும் முன்புறத்தில் 8MP செல்ஃபி கேமராவும் உள்ளது. இது நாம் எடுக்கும் போட்டோக்களை துல்லியமாக நமக்கு தருகிறது.

பேட்டரி அமைப்பு:

Infinix Hot 30 5G மொபைலில் 5000mAh பேட்டரி திறனும் 18வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் எடை 215 கிராம் மட்டுமே. இதனால் நமக்கு இதனை கையாளுவதற்கு மிகவும் எளிமையாக இருக்கும்.

google news

latest news

விளையாட்டில் உலக அளவில் தமிழகம் சாதனை…துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்…

Published

on

Udhayanidhi Stalin

மதுரை மற்றும் விருதுநகரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பரிசுகளை வழங்கினார். முப்பது மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். விழாவில் பேசிய போது விளையாட்டு துறையில் சர்வதேச அளவில் தமிழகம் சாதனை நிகழ்த்தி வருவதாக பெருமிதம் தெரிவித்தார்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விருதுநகர் மாவட்டத்தில் நடந்த விழாவில் பங்கேற்றார். அம்மாவட்டத்தில் உள்ள நானூற்றி ஐம்பது ஊராட்சிகளுக்கு ரூபாய்  இரண்டு கோடியே என்பத்தி ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரண தொகுப்புகளை வழங்கினார்.

Sports

Sports

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற இரண்டாயிரத்து நூற்றி பதினோறு பேருக்கு ரூ42.96 லட்சம் மதிப்பிலான பரிசு தொகைகளையும், 255 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.45.39 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும்.

முப்பது மாற்றுத்திறனாளிகளுக்கு சுயதொழில் புரிவதற்கான வங்கிகடன் மானியம் என 2,846 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 95லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கினார்.

பின்னர் பேசிய அவர், தலைசிறந்து விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் முதலமைச்சர் இந்த முறை பரிசு தொகையை மட்டும் ரூ.37 கோடியாக உயர்த்தி உள்ளார்.

தமிழ்நாட்டைச்சேர்ந்த வீரர் – வீராங்கனைகள் உலக அளவில் சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர். ஹங்கேரியில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா தங்கம் வென்றது. தெற்காசியாவிலேயே சென்னையில் எப்-4 கார் பந்தயம் நடத்தப்பட்டது. கன்னியாகுமரியை சேர்ந்த வீரர் லண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்றுள்ளார். விருதுநகரை சேர்ந்த கூடைப்பந்து வீராங்கனை பதக்கங்களை வென்று வருகிறார் என தமிழக வீரர்களின் சாதனைகளை சுட்டிக்காட்டி பேசி பெருமிதம் தெரிவித்திருந்தார்.

google news
Continue Reading

cinema

நடிகர் ரஜினியின் உடல் நிலை…விரைவில் நலனடைய குவியும் வாழ்த்துகள்…

Published

on

Rajinikanth

தமிழ் சினிமா மற்றுமன்றி இந்தியத் திரை உலகத்திலேயும் முன்னனி நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். பஸ் கண்டக்டராக இருந்தவர் தனது திறமையாலும், அசராத உழைப்பாலும் சினிவாவில் வானாளாவிய வெற்றி பெற்றவராக திகழ்ந்து வருபவர்.

“சூப்பர் ஸ்டார்” என அன்பாக அழைக்கப்பட்டு வருகிறார் ரஜினிகாந்த். இவர் நடித்துள்ள “கூலி” திரைப்படம் வருகிற பத்தாம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த “வேட்டையன்” பட பாடல் வெளியீட்டு விழாவில் நடனமாடி ரசிகர்களை மகிழ்வித்திருந்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “கூலி” படத்தில் நடித்து வருகிறார்.

Super Star Rajinikanth

Super Star Rajinikanth

ஓணம் பண்டிகைக்கு “வேட்டையன்” படப்பாடலுக்கு “கூலி” படக்குழுவினருடன் இணைந்து உற்சாகமாக நடனமாடிய வீடியோ வெளியாகி வைரலானது. “கூலி” படத்தில் நடித்து வரும் நிலையில் ரஜினிகாந்துக்கு திடீரென உடல் நலக்கோளாறு ஏற்பட்டது.

இதனால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தொடர்ந்து தீவிர சிகீட்சை வழங்கப்பட்டு வருகிறது. தீவிர சிகீட்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இவரின் உடல் நிலை குறித்து அவருக்கு சிகீட்சை அளித்து வரும் மருத்துவர்கள் கூறும் போது மருத்துவமனைக்குளே இருக்கும் போதும் அவர் சூப்பர் ஸ்டார் தான் என சொல்லியிருப்பதாக தமிழ் செய்தி சேனல் ஒன்றின் மூலம் வெளியாகியுள்ளது.

ரஜினியின் உடல் நிலையில் முன்னேற்றம் கண்டு அவர் விரைவில் வீடு திரும்ப வேண்டும் என அவரது ரசிகர்கள் தீவிரமான பிரார்த்தனைகளை செய்து வருகின்றனர். அதே போல ரஜினிகாந்த் விரைவில் நலன் பெற்று வரவேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

google news
Continue Reading

latest news

உதயநிதியை சந்தித்த நடிகர் சிவகார்த்திக்கேயன்…துணை முதல்வருக்கு வாழ்த்து…

Published

on

Udhayanidhi Sivakarthikeyan

தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் அன்மையில் செய்யப்பட்டது. விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டார். தமிழக ஆளுநர் முன்பு நடந்த பதவு ஏற்பு விழாவில் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றுக் கொண்டார். இதை தொடர்ந்து தமிழ்த் திரை உலகத்தை சார்ந்த பலரும் உதயநிதிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்த் திரை உலகத்தில் முன்னனி நடிகராக இருந்து வருபவர் உதயநிதி, இவர் வடிவேலுவுடன் இணைந்து நடித்த “மாமன்னன்” படம் சமீபத்தில் வெளியானது. தமிழில் பல வெற்றிப் படங்களில் நடித்திருக்கிறார் இவர். சந்தானத்துடன் இவர் இணைந்து நடித்திருந்த “ஒரு கல் ஒரு கண்ணாடி” படம் மிகப்பெரிய வெற்றியை இவருக்கு பெற்றுத்தந்தது. சந்தானத்துடன், உதயநிதி காமெடியில் கலக்கியிருந்தார்.

‘பார்த்தா’, ‘சரவணன்’ என்ற இந்த இரண்டு கதாப்பாத்திரங்களை தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் என்றும் நிற்கும் அளவில் நடித்திருந்தனர் இந்த இருவரும்.

Udhayanidhi Soori Santhanam

Udhayanidhi Soori Santhanam

2021ம் ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற உதயநிதிக்கு தமிழக அமைச்சரவையில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை வழங்கப்பட்டது.

அன்மையில் அமைச்சரவையில் மாற்றம் செய்து உத்தரவிட்டிருந்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின். அதில் உதயநிதி துணை முதல்வராக நியமிக்கப்பட்டார். துணை முதல்வராக பதவி ஏற்றுக் கொண்ட உதய நிதிக்கு நடிகர் சத்யராஜ் வீடியோ மூலம் தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

நடிகர் சந்தானம், சூரி ஆகியோர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வந்திருந்தனர். இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னனி கதாநாயகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். துணை முதல்வராக நியமிக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலினை தமிழ் சினிமா பிரபலங்கள் தொடர்ந்து வாழ்த்தி வருகின்றனர்.

google news
Continue Reading

latest news

கன மழைக்கான வாய்ப்பு உள்ள மாவட்டங்கள் எது எது?…வானிலை ஆய்வு மையம் சொன்ன அப்-டேட்…

Published

on

Rain

குமரிக்கடல் மற்றும் தமிழக பகுதிகளின் மேலடுக்கு வளி மண்டங்களில் குளிர்ச்சியான நிலை நிலவுவதன் காரணமாகவே தமிழகத்தில் மழை பெய்யத் துவங்கியது என்றும், இந்த மழை அடுத்த ஐந்து நாட்களுக்கு நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் சொல்லியிருந்தது ஏற்கனவே.

இந்த சூழலில் தமிழகத்தின் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த இரு நாட்களாக அடுத்தடுத்து பெய்து வரும் மழையினால் வெயில் வாட்டி வந்த இடங்களில் இதமான சூழல் நிலவுவதாக சொல்லப்படுகிறது.

தமிழகத்தின் வட-கிழக்கு பருவ மழை துவங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இப்பொது பெய்து வரும் இந்த மழை பலரையும் நிம்மதிப் பெருமூச்சு விட வைத்துள்ளது.

RainFall

RainFall

கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் மற்றும் சேலம் ஆகிய ஏழு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகரைப் பொறுத்த வரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் சொல்லியிருக்கிறது.

மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப் பகுதிகள், தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு முப்பத்தி ஐந்து முதல் நாற்பத்தி ஐந்து கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே ஐம்பத்தி ஐந்து கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் இப்பகுதி மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

google news
Continue Reading

Cricket

டெஸ்ட் கிரிக்கெட்…இலக்கு எளியது….கோப்பை இந்தியாவுக்கு?…

Published

on

Ind vs Ban

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது வங்கதேச கிரிக்கெட் அணி. மூன்று இருபது ஓவர் போட்டி தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரினல் விளையாட இந்தியாவிற்கு வந்துள்ள வங்கதேச அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் வைத்து நடந்த இந்தப் போட்டியில் அசாத்திய திறமையை வெளிப்படுத்திய இந்திய அணி அசத்தலான வெற்றியை பெற்றது. இந்திய அணியின் ஆல்-ரவுண்டர்களான அஷ்வின் – ஜடேஜா இணை பேட்டிங் மற்றும் பவுலிங்கில் ஜொலிக்க, வங்கதேசத்தை எளிதாக வீழ்த்தியது இந்தியா. இந்த இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்று வருகிறது.

Test Series

Test Series

டாஸ் வென்று பங்களாதேஷை பேட்டிங் செய்ய வைத்தது இந்தியா, மழை குறுக்கீட்டின் காரணமாக போட்டி தடை பெற்று வந்த நிலையில் நான்காம் நாள் ஆட்டம் முழுவதுமாக நடந்து முடிந்தது.

போட்டியை வென்றாக வேண்டும் என்ற முனைப்போடு இந்திய வீரர்கள் இருபது ஓவர் ஆட்டத்தில் விளையாடுவதைப் போல பேட்டிங்கில் அதிரடி காட்டினர். இந்திய அணி முன்னிலை பெற்று டிக்ளர் செய்ய தனது இரண்டாவது இன்னிங்ஸை தடுமாற்றத்துடன் தொடர்ந்தது வங்காளதேசம்.

ஐந்தாம் நாளான இன்று நூற்றி நாற்பத்தி ஆறு ரன்களை எடுத்து பத்து விக்கெட்டுகளையும் இழந்தது வங்கதேசம். தொன்னூற்றி ஐந்து ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடி வருகிறது இந்தியா.

நாலு ஓவர்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இருபத்தி ஒன்பது ரன்களை எடுத்து ரோஹித் சர்மாவின் விக்கெட்டினை பறிகொடுத்து விளையாடி வருகிறது இந்தியா. இந்த போட்டியில் வென்றாலும், டிராவில் முடிவடைந்தாலும் இந்திய அணி கோப்பையை தன் வசப்படுத்திக்கொள்ளும்.

 

google news
Continue Reading

Trending