Connect with us

tech news

இதுதான் டிசைனா? ஐபோன் 16-ல அதிர்ச்சி காத்திருக்கு

Published

on

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 16 மாடல் புகைப்படம் ரெடிட் தளத்தில் லீக் ஆகி உள்ளது. இதில் புதிய ஐபோன் மாடல் எப்படி காட்சியளிக்கும் என்ற விவரங்கள் தெரியவந்துள்ளது. புதிய ஐபோன் 16 சீரிஸ் வெளியாக இன்னும் சிலகாலம் தான் எஞ்சியுள்ளது. இந்த நிலையில், புதிய ஐபோனின் புகைப்படம் லீக் ஆகி இருப்பது ஏராளமான கேள்விகளுக்கு வழி செய்துள்ளது.

தற்போது வெளியாகி இருக்கும் புகைப்படத்தில் இருப்பது ஐபோன் 16-இன் டம்மி யூனிட் ஆகும். அதில் ஐபோனின் பின்புற பேனலில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பது தெளிவாக காட்சியளிக்கிறது. குறிப்பாக கேமரா பம்ப் வடிவம் மாற்றப்பட்டு மூலைவிட்ட வடிவில் காட்சியளிக்கிறது. இதனுள் இரண்டு கேமரா சென்சார்கள் ஒன்றன் கீழ் ஒன்றாக பொருத்தப்பட்டு இருக்கிறது.

இத்துடன் பின்புற பிளாஷ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடலில் பிளாஷ் யூனிட் கேமரா பம்ப் வெளியே இடம்பெற்று இருக்கிறது. ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் மாடல்களின் டிசைனை மாற்றுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி வந்தன. இவ்வாறு செய்யும் போது புதிய சாதனங்களை வித்தியாசப்படுத்த முடியும்.

தற்போது வரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய ஐபோன் 16 மாடல் ஏராளமான நிறங்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதில் புளூ, கிரீன் மற்றும் பின்க் உள்ளிட்டவை இடம்பெறும் என்று தெரிகிறது. அம்சங்களை பொருத்தவரை ஐபோன் 16 மாடலில் 6.1 இன்ச் OLED டிஸ்ப்ளே, அதிக காண்டிராஸ்ட் வழங்கப்படலாம். இத்துடன் ஆக்ஷன் பட்டன் வழங்கப்படுகிறது.

ஐபோன் 16 மற்றும் ஐபோன் 16 பிளஸ் மாடல்களில் ஆப்பிள் ஏ18 பயோனிக் சிப்செட் வழங்கப்படும் என்றும் இவை 3 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் சற்றே சக்திவாய்ந்த ஏ18 ப்ரோ சிப்செட் வழங்கப்படும் என்று தெரிகிறது.

google news