ப்ளிப்கார்ட் தளத்தில் பிக் தீபாவளி 2024 விற்பனை தேதி அறிவிக்கப்பட்டது. இந்த மாத இறுதியில் தீபாவளி பண்டிகை வருவதை ஒட்டி, ப்ளிப்கார்ட் தளத்தில் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ப்ளிப்கார்ட் சிறப்பு விற்பனை நடைபெறுவது வாடிக்கையான விஷயம் தான்.
இந்த விற்பனையில், பல்வேறு பொருட்கள், மின்சாதனங்கள், அக்சஸரீக்கள் உள்ளிட்டவைகளுக்கு சிறப்பு தள்ளுபடி, வங்கி சார்ந்த சலுகைகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ப்ளிப்கார்ட் பிக் தீபாவளி 2024 விற்பனை அக்டோபர் 21 ஆம் தேதி துவங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
எனினும், ப்ளிப்கார்ட் பிளஸ் அல்லது விஐபி வாடிக்கையாளர் எனில், இந்த சிறப்பு விற்பனை பலன்களை ஒருநாள் முன்பே, அதாவது அக்டோபர் 20 ஆம் தேதி பயன்படுத்த முடியும். ப்ளிப்கார்ட் பிக் தீபாவளி 2024 விற்பனையில் ஸ்மார்ட்போன், நுகர்வோர் மின்சாதன பொருட்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்படுகின்றன.
இதுதவிர ஸ்டேட் பேங்க் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது கூடுதலாக பத்து சதவீதம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதற்கு குறிப்பிட்ட அளவு தொகை கொண்ட பொருட்களை வாங்க வேண்டியது அவசியம் ஆகும்.
இந்த விற்பனையின் போது வழங்கப்பட இருக்கும் சலுகைகளை ப்ளிப்கார்ட் தற்போதே டீசர்களாக வெளியிட்டுள்ளது. அதன்படி ஐபோன் 15 மாடல் குறைந்தபட்சம் ரூ. 49,999 விலையிலேயே கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இதே போன்று ஆப்பிள் மேக்புக் எம்2 மாடலை கணிசமான தள்ளுபடி விலையில் வாங்கிட முடியும். மேலும், முந்தைய தலைமுறை ஏர்பாட்ஸ் மாடல்களை ரூ. 9,999 விலையிலேயே வாங்கிடலாம்.
ஃபேஸ்புக்கின் மெட்டாவுக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் நிறுவனம், Restyle என்ற புதிய அப்டேட்டைக் கொண்டுவர இருக்கிறது. இதுல என்னலாம் பண்ணலாம்? Instagram’s…
OpenAI நிறுவனத்தின் ஏஐ வீடியோ எடிட்டிங் செயலியான Sora விரைவில் ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. OpenAI Sora ChatGPT…
பயனாளர்களின் செல்ஃபிக்களை வைத்து அதை மீம் டெம்ப்ளேட்டாக மாற்றும் புதிய வசதியை கூகுள் போட்டோஸ் விரைவில் அப்டேட் செய்ய இருப்பதாகத்…
Meta: மெட்டா நிறுவனம் anti-scam வசதிகளையும், விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் நடத்த திட்டமிட்டு இருக்கிறது. இதன் மூலம் whatsapp, messenger மற்றும்…
ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அறிமுகமானபோதே, deep fake என்றொரு பிரச்சனையும் அதோடு கூடவே சேர்ந்து வளர்ந்தது. Deep…
பிரவுசர் உலகில் முடிசூடா மன்னனாக இருக்கும் கூகுளின் குரோமுக்குப் போட்டியாக சாட்ஜிபிடி Atlas என்கிற ஏஐ தொழில்நுட்பத்தோடு இயங்கக் கூடிய…