Connect with us

tech news

அதிபுத்திசாலி ஏ.ஐ. உருவாக்கும் ஓபன்ஏ.ஐ. இணை நிறுவனர்

Published

on

ஓபன்ஏஐ நிறுவனத்தின் இணை நிறுவனரும், முன்னாள் தலைமை ஆய்வாளருமான இல்யா சட்ஸ்கீவர் புதிய நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளார். ஓபன்ஏ.ஐ. நிறுவனத்தில் இருந்து வெளியேறிய இல்யா சொந்தமாக துவங்கி இருக்கும் புதிய நிறுவனம் தான் சேஃப் சூப்பர்இன்டெலிஜென்ஸ் இன்க் (Safe Superintelligence Inc-SSI). இந்த நிறுவனம் பாதுகாப்பான ஏ.ஐ. தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது.

இந்த நிறுவனத்தை ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் ஏ.ஐ. பிரிவு தலைவர் டேனியல் கிராஸ், ஓபன்ஏ.ஐ. முன்னாள் பொறியாளர் டேனியல் லெவி ஆகியோருடன் இணைந்து சட்ஸ்கீவர் துவங்கியுள்ளார். இவர்களின் நோக்கம், பாதுகாப்பான மற்றும் சக்திவாய்ந்த ஏ.ஐ. சிஸ்டத்தை உருவாக்குவது ஆகும்.

புதிய நிறுவனம் பற்றிய அறிவிப்பை இல்யா சட்ஸ்கீவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “நான் புதிய நிறுவனம் ஒன்றை துவங்குகிறேன். நாங்கள் நேரடியாக ஒரே குறிக்கோள், ஒரே இலக்குடன் ஒற்றை சேவையில் கவனம் செலுத்த இருக்கிறோம். சிறு குழுவாக இணைந்து இந்த துறையில் புரட்சிகர எல்லைகளை படைப்போம், எங்களுடன் இணையுங்கள்,” என்று குறிப்பிட்டு தனது நிறுவனத்தின் வலைதள முகவரியை இணைத்துள்ளார்.

சூப்பர்இன்டெலிஜென்ஸ் இன்க் நிறுவனத்தின் அறிவிப்பில், பாதுகாப்பு முன்னிறுத்தி அதிநவீன ஏ.ஐ. தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த குறிக்கோள் காரணமாக எஸ்.எஸ்.ஐ. நிறுவனம் தற்போது முன்னணியில் உள்ள ஏ.ஐ. நிறுவனங்களான ஓபன்ஏ.ஐ., கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் உள்ளிட்டவை எதிர்கொண்டு வரும் புதுமை மற்றும் வணிகமயமாக்கல், நிர்வாக தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய சிக்கலை தவிர்க்க முடியும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

tech news

இந்திய சேவையை நிறுத்துகிறோம்.. கூ அறிவிப்பு

Published

on

இந்தியாவின் சமூக வலைதளம்- கூ இந்தியாவில் தனது சேவைகளை நிறுத்துவதாக அறிவித்து இருக்கிறது. முதலீடுகளை ஈர்க்க முடியாமல் போனது, கூட்டணி அமைப்பதில் ஏற்பட்ட சிக்கல் உள்ளிட்டவைகளே கூ மூடப்படுவதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

2020 ஆம் ஆண்டு எக்ஸ் (முன்பு டுவிட்டர்) தளத்திற்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்ட தளம் தான் கூ. இந்த தளத்தில் பயனர்கள் பல்வேறு இந்திய மொழிகளில் தகவல்கள் மற்றும் கருத்துக்களை பதிவிட முடியும். கூ சேவை நிறுத்தப்படுவதாக அதன் நிறுவனர்களான அப்ராமையா ராதாகிருஷ்ணா மற்றும் மயங்க் பிடவாட்கா ஆகியோர் லிங்க்டுஇன் பதிவில் உறுதிப்படுத்தினர்.

“மிகப்பெரிய இண்டர்நெட் நிறுவனங்கள், ஊடக நிறுவனங்கள் என பலரிடம் கூட்டணிக்காக பேச்சுவார்த்தை நடத்தினோம். எனினும், நாங்கள் எதிர்பார்த்த முடிவு கிடைக்கவில்லை,” என்று அந்த பதிவில் அவர்கள் குறிப்பிட்டனர்.

இந்தியாவில் கூ சேவை துவங்குவதற்காக டைகர் குளோபல், அக்செல், 3ஒன்4 கேப்பிட்டல், மிரே அசெட் மற்றும் புளூமெ என பல்வேறு நிறுவனங்கள் முதலீடு செய்தன. இந்த நிறுவனத்தில் இதுவரை 60 மில்லியன் இந்திய மதிப்பில் ரூ. 500 கோடிக்கும் அதகமான தொகை முதலீடு செய்யப்பட்டது.

கடந்த பிப்ரவரி மாத வாக்கில் கூ நிறுவனம் டெய்லிஹண்ட் உடன் இணைவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது. எனினும், இரு நிறுவனங்கள் இடையே கூட்டணி உருவாகவில்லை.

துவங்கப்பட்ட காலக்கட்டத்தில் கூ செயலி 60 மில்லியனுக்கும் அதிக டவுன்லோட்களை கடந்தது. ஒவ்வொரு மாதமும் சுமார் 10 மில்லியனுக்கும் அதிகமானோர் கூ சேவையை பயன்படுத்தி வந்தனர். தினமும் இந்த செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 2.3 மில்லியனாக இருந்தது. இதில் ஒவ்வொரு மாதமும் 10 மில்லியனுக்கும் அதிக பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன.

Continue Reading

tech news

CMF பிரான்ட் அம்பாசிடர் ஆன ராஷ்மிகா மந்தனா

Published

on

நத்திங் நிறுவனம் தனது CMF பிரான்ட் பொருட்களை இந்தியாவில் விளம்பரப்படுத்த ராஷ்மிகா மந்தனாவுடன் கைகோர்த்துள்ளது. முன்னதாக நத்திங் ஸ்மார்ட்போன்களை விளம்பரப்படுத்த அந்நிறுவனம் ரன்வீர் சிங் உடன் கைகோர்த்தது குறிப்பிடத்தக்கது.

பிரான்ட் அம்பாசிடர் என்ற அடிப்படையில், ராஷ்மிகா மந்தனா CMF சாதனங்களை டிஜிட்டல், அச்சு ஊடகம் மற்றும் தொலைகாட்சி விளம்பரங்கள் மூலம் விளம்பரப்படுத்துவார். இதுதவிர CMF பிரான்ட் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் CMF போன் 1 அம்சங்களையும் அறிவித்து இருக்கிறது.

அதன்படி CMF போன் 1 மாடலில் பயனர்கள் கழற்றி மாற்றிக் கொள்ளக்கூடிய பேக் கவர்கள் நான்கு நிறங்களில் வழங்கப்படும். முதற்கட்டமாக CMF போன் 1 மாடலின் பேக் கவர்கள் பிளாக், ஆரஞ்சு, லைட் கிரீன் மற்றும் புளூ உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும்.

இவற்றில் பிளாக் மற்றும் லைட் கிரீன் போனின் கேஸ் உடனேயே டெக்ஸ்ச்சர் வடிவில் நேரடியாக பொருத்தப்பட்டு இருக்கும். புளூ மற்றும் ஆரஞ்சு நிறங்கள் அழகிய வீகன் லெதர் லேயர் பேக் கேஸ்-இன் மேல் வைக்கப்பட்டு இருக்கும் என்று CMF அறிவித்து இருக்கிறது.

இத்துடன் ஸ்மார்ட்போனின் பின்புற கேஸ் உடன் கழற்றி மாற்றிக் கொள்ளக்கூடிய அக்சஸரீக்கள் வழங்கப்பட உள்ளன. இதில் கனெக்டர், ஸ்டாண்ட் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

முந்தைய டீசர்களில் CMF போன் 1 மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 7300 பிராசஸர், அதிகபட்சம் 8GB ரேம் வழங்கப்படும் என்றும் இதில் 6.67 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படும் என்று தெரிவித்து இருந்தது. இந்த ஸ்மார்ட்போன் ஜூலை 8 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Continue Reading

tech news

ஏர்டெல், ஜியோ விலையை உயர்த்த பிஎஸ்என்எல் மட்டும் அப்படி செய்யவில்லை..!

Published

on

இந்திய டெலிகாம் சந்தையில் இன்று (ஜூலை 3) துவங்கி ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா என முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் தங்களின் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்திவிட்டன. தனியார் டெலிகாம் நிறுவனங்கள் தங்களது ரிசார்ஜ் கட்டணங்களை மாதம், காலாண்டு மற்றும் வருடாந்திர அடிப்படையில் அதிகபட்சம் 25 சதவீதம் வரை உயர்த்தியுள்ளன.

விலை உயர்வு மூலம் வருவாயை அதிகப்படுத்திக் கொள்ள டெலிகாம் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இந்த முடிவு காரணமாக முன்னணி டெலிகாம் சேவையை பயன்படுத்தும் பயனர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். இந்தியாவில் மொபைல் டேட்டா பயன்பாடு வரலாறு காணாத வகையில் அதிகரித்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு பலருக்கும் பேரிடியாக அமைந்தது.

தனியார் டெலிகாம் சேவை வழங்கும் நிறுவனங்கள் விலையை உயர்த்திய நிலையில், அரசு துறை நிறுவனமான பிஎஸ்என்எல் தனது ரீசார்ஜ் கட்டணங்களை பழைய விலையிலேயே வழங்கி வருகிறது. இவை தற்போது மாற்றப்பட்ட ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவன சேவைகளின் ரீசார்ஜ் கட்டணங்களைவிட பெருமளவு குறைவு ஆகும்.

பிஎஸ்என்எல் ரிசார்ஜ் கட்டணங்கள் ரூ. 107 முதல் துவங்குகின்றன. இந்த ரீசார்ஜ் 35 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. இதில் 3GB வரை 4ஜி டேட்டா மற்றும் 200 நிமிடங்களுக்கு வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது.

ரூ. 108 பிஎஸ்என்எல் ரீசார்ஜ்-இல் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 1GB 4ஜி டேட்டா உள்ளிட்ட பலன்கள் 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. பிஎஸ்என்எல் ரூ. 197 ரீசார்ஜ் 70 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. இதில் 2GB 4ஜி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், முதல் 18 நாட்களுக்கு தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் ரூ. 199 ரீசார்ஜ்-இல் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 2GB டேட்டா 70 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ரூ. 397 ரீசார்ஜ் பொதுவாக பண்டிகை காலக்கட்டங்களில் வழங்கப்படும். இது 150 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இதில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் 2GB 4ஜி டேட்டா முதல் 30 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் ரூ. 797 ரீசார்ஜ் 300 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. இதில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 2GB டேட்டா உள்ளிட்டவை முதல் 60 நாட்களுக்கு வழங்கப்படும். பிஎஸ்என்எல் ரூ. 1999 ரீசார்ஜ்-இல் 365 நாட்கள் வேலிடிட்டி உள்ளது. இதில் 600GB 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் பிஎஸ்என்எல் டியூன்ஸ் மற்றும் பல்வேறு மூன்றாம் தரப்பு சேவைகளுக்கான சந்தா வழங்குகிறது.

Continue Reading

tech news

AI மற்றும் வாவ் இன்டர்ஃபேஸ் கொண்ட எல்ஜி SoundBar இந்தியாவில் அறிமுகம்

Published

on

எல்ஜி நிறுவனம் இந்தியாவில் 2024 சீரிஸ் சவுன்ட்பார் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் மொத்தம் 5 மாடல்கள் உள்ளன. புதிய சவுன்ட்பார்களில் டால்பி அட்மோஸ், AI சார்ந்த சவுண்ட் கேலிபரேஷன் எனும் ஒலியை அளவுதிருத்தம் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஒரு அறைக்குள் தலைசிறந்த ஒலி அனுபவத்தை பெற உதவுகிறது.

அம்சங்களை பொருத்தவரை புதிய 2024 சீரிஸ் சவுன்ட்பார்களான S65TR மாடலில் 5.1.2 சரவுண்ட் சவுண்ட், LG SQ70TY மாடலில் 3.1.1 சேனல், SQ75TR மாடலில் 5.1.1 சேனல், S77TY மாடலில் 3.1.1 சேனல், SG10Y மாடலில் 3.1 சவுன்ட் சேனல் அவுட்புட் உள்ளது.

இத்துடன் எல்ஜி சவுன்ட்பார்கள் தானாக டிவியுடன் இணைந்து கொண்டு இயங்கும் வசதி கொண்டுள்ளது. புதிய சவுன்ட்பாரில் உள்ள வாவ்கேஸ்ட் (WOWCAST) தொழில்நுட்பம் சீரான மல்டி-சேனல் ஆடியோ டிரான்ஸ்மிஷனை உறுதிப்படுத்துகிறது. சவுன்ட்பாரின் செட்டிங்களை, டிவி ரிமோட் மூலம் இயக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய எல்ஜி சவுன்ட்பார்களில் AI சவுண்ட்ப்ரோ வசதி உள்ளது. இது பயனர் பார்க்கும் அல்லது கேட்க விரும்பும் ஒலி வகைக்கு ஏற்றவாரு சவுண்ட் செட்டிங்களை தானாக மாற்றி அமைக்கும். இதன் மூலம் சிறப்பான ஆடியோ அனுபவத்தை பெற முடியும்.

டிசைனை பொருத்தவரை புதிய சவுன்ட்பார்கள் மிக மெல்லியதாகவும், உங்களது டிவியுடன் ஒற்றுப் போகும் வகையிலும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த சவுன்ட்பார்கள் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களால் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. இவை சுற்றுச்சூழலுக்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

மற்ற அம்சங்களாக எல்ஜி S65TR மற்றும் SQ75TR சவுன்ட்பார்கள் அதிகபட்சம் 600W அவுட்புட் கொண்டவை ஆகும். எல்ஜி SQ70TY மற்றும் S77TY சவுன்ட்பார்கள் அதிகபட்சம் 400W அவுட்புட் கொண்டுள்ளது. எல்ஜி SG10TY சவுன்ட்பார் 420W அவுட்புட் வழங்குகிறது.

இவை அனைத்திலும் ஒரு HDMI இன் மற்றும் அவுட் உள்ளது. எல்ஜி SG10TY மாடலில் மட்டும்தான் AI ரூம் கேலிபரேஷன் வசதி கொண்டுள்ளது. எல்ஜி SQ70TY சவுன்ட்பார் சென்டர் அப்-ஃபயரிங் சேனல் மற்றும் டிரிபில் லெவல் ஸ்பேஷியல் சவுன்ட் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

விலை விவரங்கள்:

புதிய எல்ஜி சவுன்ட்பார் மாடல்களின் விலை ரூ. 29,990 முதல் துவங்குகின்றன. இதன் விற்பனை எல்ஜி வலைதளம், ஆஃப்லஸைன் ஸ்டோர் மற்றும் ஆன்லைன் வலைதளங்களில் நடைபெறுகிறது.

Continue Reading

tech news

பாரபட்சம் இருக்காது.. ஒரே பிராசஸருடன் வெளியாகும் ஐபோன் 16 சீரிஸ் மாடல்கள்.?

Published

on

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 16 சீரிஸ் மாடல்களை வருகிற செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஐபோன்கள் பற்றிய தகவல்கள் தொடர்ச்சியாக இணையத்தில் வெளியாகி வந்துள்ளன. அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் டிசைன், அம்சங்கள் என ஏராளமான விவரங்கள் கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளன.

அந்த வரிசையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய ஐபோன் 16 சீரிஸ் மாடல்கள் அனைத்திலும் ஆப்பிள் A18 சிப்செட் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் பேக்-என்ட் விவரங்களில் இருந்து இது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

பேக்-என்ட் கோட்களில் புதிய ஐபோனின் சிப்செட் ஐபோன் 17.1, ஐபோன் 17.2, ஐபோன் 17.3, ஐபோன் 17.4 மற்றும் ஐபோன் 17.5 உள்ளிட்ட மாடல்களில் ஒரே சிப்செட் வழங்குவதை குறிப்பதாக தெரிகிறது. இதேபோன்ற பெயர் வைக்கும் முறையை ஆப்பிள் தனது ஐபோன் 15 சீரிசிலும் பயன்படுத்தி இருந்தது.

அதன்படி ஐபோன் 15 மாடலின் பெயர் ஐபோன் 15.4 என்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ்-இன் பெயர் ஐபோன் 16.2 என்றும் வைக்கப்பட்டது. புதிய ஐபோன்களிலும் இதேபோன்ற பெயர் வைக்கப்பட்டு இருப்பது அம்பலமாகி இருக்கிறது. அதன்படி புதிய மாடல்கள் அனைத்திலும் ஒரே சிப்செட் வழங்கப்படும் என்பது உறுதியாகி உள்ளது.

ஒரே மாதிரியான சிப்செட் வழங்கப்பட்டாலும், புதிய ஐபோன்களை வித்தியாசப்படுத்தும் அம்சம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. அதன்படி ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ் அல்லது ஐபோன் 16 ஸ்லிம் மாடல்களில் A18 சிப் வழங்கப்படலாம்.

ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடலில் சக்திவாய்ந்த A18 ப்ரோ சிப் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. எனினும், புதிய ஐபோன்கள் பற்றி ஆப்பிள் வழக்கம்போல அமைதியாகவே இருந்து வருகிறது.

Continue Reading

Trending

Exit mobile version