வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில் ஸ்மார்ட்போன்கள் மக்களிடையே தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. நாளுக்கு நாள் அதன் பயன்ப்பாடும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஸ்மார்ட் போன் நிறுவனங்களும் தங்களது ஃபோனில் நாளுக்கு நாள் புதுப்புது சிறப்பம்சங்கள் செய்து வெளியிட்டு வருகிறனர். நவீன காலத்து ஸ்மார்ட் ஃபோன்கள் அனைத்தும் கேமராவை மையப்படுத்தி அதில் புதுமைகளை செய்து வியாபாரம் செய்து வருகின்றனர். தற்பொழுது மடக்கும் திரை கொண்ட ஸ்மார்ட்போன்கள்,எஜ் டிஸ்ப்ளே,மெல்லிய தொடுதிரை என விதவிதமாக உள்ளது. இந்நிலையில் எதிர்காலத்தில் மக்களே வியக்கும் அளவிற்கு போனில் புரட்சி செய்ய நிறுவனங்கள் திட்டமிட்டிருக்கிறது.
vivo :
விவோ நிறுவனம் அதன் போன்களை கேமிராவை கொண்டு சந்தைப்படுத்தி அதன் மூலம் வியாபாரம் செய்து வரும் நிலையில் எதிர்கால ஸ்மார்ட் போனகளில் புரட்சியை ஏற்ப்படுத்த முயல்கிறது. போனின் உட்புறத்தில் இருந்து வெளியே வரும் பறக்கும் வடிவில் ”ட்ரோன் கேமரா” என்று அழைக்கப்படும் வசதி கொண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். வீடியோ எடுத்த பின்பு வேண்டாம் என்ற பட்சத் தில் மீண்டும் அந்த போனுக்குள்ளே கேமரா சென்று விடுவது போல் அதன் வடிவமைப்பு இருக்கும்.
இத்தகைய ஸ்மார்ட் போன் நடைமுறைக்கு வந்தால் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பவர்களிடம் அதிக அளவு ஈடுபாட்டை இந்தமொபைல் ஏற்படுத்தும். இது உலக அளவில் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பில் உள்ள ஃபியூச்சர் போனாக உள்ளது. குறிப்பாக youtubeவாசிகளுக்கு வி-லாக் செய்வதற்க்கு வசதியாக இருக்கும் வீடியோ எடுக்க மிகவும் பொருத்தமான வசதியான ஸ்மார்ட் போனாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
apple :
உலகின் அதிகவிலையில் விற்க்கப்படும் பிரீமியம் போன் என்று அழைக்கப்படுவது ”ஆப்பிள்” நிறுவனத்தின் ஐபோன்கள். தற்போது ஸ்மார்ட்போன் உலகின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. ஐபோனில் கண்டுபிடிக்கப்படும் சிறப்பம்சங்களை கொண்டு தான் மற்ற மொபைல் நிறுவனங்கள் தங்களது மொபைல்களில் சிறுசிறு மாறுபாடுகளுடன் மொபைலை தயார்செய்து வெளியிடுகிறது. வரும் காலத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் எதிர்பாராத விதமாக கீழே விழுந்து தொடுதிரை சேதமானால் அதை தன்னைத் தானே சரி செய்து கொள்ளும் ”செல்ப் ஹீலிங்” டெக்னாலஜி கொண்டு ஸ்மார்ட் போன் வடிவமைக்கப்படும். அதற்கான பேட்டன் ரைட்டும் ஆப்பிள் நிறுவனத்தின் கைவசம் உள்ளது.
moto and lg :
அதேப்போல மோட்டோரோலா என அழைக்கபடும் ”மோட்டோ” நிறுவனத்தில் “ரோலபில் டிஸ்ப்ளே” என்னும் தொழில்நுட்பம் கொண்டு மொபைலை தயாரிக்க உள்ளதாக தெரிவிக்கின்றனர். அதை போல் எல்.ஜி நிறுவனமும் பென்சில் போன்ற அமைப்பு கொண்ட தொடுத்திரை ஸ்மார்ட் ஃபோன்களை உருவாக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…