செயற்கை நுண்ணறிவு என்ற ஏ.ஐ. தொழில்நுட்பம் இன்று உலகின் ஒட்டுமொத்த கவனத்தை தன்பக்கம் ஈர்த்துள்ளது. பல்வேறு நிறுவனங்களும் தங்களுக்கென சொந்தமாக ஏ.ஐ. மாடல்களை உருவாக்கியும், சாட்ஜிபிடி போன்ற பிரபல சேவைகளை தங்களது மென்பொருள்களில் பயன்படுத்துவதற்கான பணிகளிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. பிரபல தேடுப்பொறி நிறுவனமான கூகுள் தனக்கென சொந்த ஏ.ஐ. சாட்பாட் ஒன்றை உருவாக்கி இருக்கிறது. இதனை Bard AI என்று கூகுள் அழைக்கிறது.
போட்டி நிறுவனங்கள் அறிமுகம் செய்ததால், முழுமை பெறாமல் அவசர அவசரமாக பாதியிலே அறிமுகம் செய்யப்பட்டது என்ற பெயரெடுத்த Bard AI, இனிமேல் தான் ஆட்டத்தை ஆரம்பிக்க போகிறது என்ற வகையில் அசத்தலான தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி கூகுளின் சமீபத்திய தகவல்களில் கூகுள் Bard AI தொழில்நுட்பம் பிக்சல் சாதனங்களில் ஒருங்கிணைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த வசதி முதற்கட்டமாக பிக்சல் சாதனங்களில் மட்டும் பிரத்யேகமாக வழங்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த தகவல்கள் மூலம் Bard AI மீதான எதிர்பார்ப்பு மீண்டும் ராக்கெட் வேகத்தில் எகிறியுள்ளது. கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஸ்மார்ட்போன்களின் ஹோம் ஸ்கிரீன் விட்ஜெட்டில் Bard AI வழங்கப்பட இருக்கிறது. இந்த அம்சம் தனித்துவ செயலி, ஹோம் ஸ்கிரீன் விட்ஜெட் அல்லது கூகுள் சர்ச் செயலியின் அங்கமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. Bard AI தொழில்நுட்பம் போன்களில் எதுபோன்ற தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
எனினும், போன்களில் Bard AI தொழில்நுட்பம் சாட்பாட் போன்று மட்டுமின்றி, அசிஸ்டண்ட் ஆகவும் செயல்படும் என்று கூறப்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வசதியும் வழங்கப்படும் என்றே தெரிகிறது. தற்போதைய தகவல்களின் படி இந்த அம்சம் பிக்சல் போன்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு வருகிறது. புதிய அம்சங்களை வழங்கும் போது அவற்றை பிக்சல் போன்களில் சோதனை செய்வதை கூகுள் வழக்கமாக கொண்டிருக்கிறது. இதன் மூலம் புதிய தொழில்நுட்பம் அன்றாட பயன்பாடுகளுக்கு எப்படி இருக்கும் என்பதை தொழில்நுட்ப வல்லுனர்கள் மூலம் கூகுள் எளிதில் அறிந்து கொள்ளும்.
பிக்சல் ஸ்மார்ட்போன்களில் Bard AI வழங்கப்பட இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் கோட் ஆய்வுகளை சார்ந்தது ஆகும். அந்த வகையில், கூகுள் இதுபற்றிய திட்டத்தில் எப்போது வேண்டுமானாலும் மாற்றங்களை செய்யலாம். மேலும் கூகுள் Bard AI இன்னமும் ஆய்வுக்கட்டத்திலேயே உள்ளது. இந்த தொழில்நுட்பம் இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படவில்லை.
Bard AI தொழில்நுட்பத்தை பயன்படுத்த விரும்பும் பயனர்கள் அதற்காக சைன்-அப் செய்து வெயிட்லிஸ்ட்-இல் இணைந்து கொண்டு காத்திருக்க வேண்டும். ஒபன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பிங் சேவைகளும் முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில்நுட்பத்தை தழுவியே உருவாக்கப்பட்டு இருக்கின்றன.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…