கூகுள் நிறுவனம் இந்தியாவில் தனது ஜெமினி ஆப்-ஐ வெளியிட்டது. இதன் மூலம் அந்நிறுவனம் இந்தியாவில் தனது ஏ.ஐ. சேவைகளை விரிவுப்படுத்தியது. இந்தியாவில் ஜெமினி மற்றும் ஜெமினி அட்வான்ஸ்டு ஆப் ஒன்பது இந்திய மொழிகளில் கிடைக்கிறது.
அதன்படி ஜெமினி ஆப் ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா, உருது, இந்தி, குஜராத்தி, மராத்தி மற்றும் பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் பயன்படுத்தலாம். பயனர்கள் இந்த செயலியில் டைப் செய்தோ, பேசியோ அல்லது புகைப்படங்களை அப்லோட் செய்தோ தங்களின் சந்தேகங்களை கேட்க முடியும். இந்த செயலி பயனர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கும்.
ஜெமினி ஆப் மட்டுமின்றி கூகுள் நிறுவனம் மேம்பட்ட அம்சங்கள் மற்றும் சக்திவாய்ந்த புதிய வசதிகளை கொண்ட ஜெமினி அட்வான்ஸ்டு (Gemini Advanced) செயலியை இந்திய மொழிகளில் அறிமுகம் செய்துள்ளது. ஜெமினி 1.5 ப்ரோ கொண்ட இந்த செயலியில் நுகர்வோர் சாட்பாட்களில் மிகப்பெரியது ஆகும்.
இதை கொண்டு நீண்ட கட்டுரைகள், மின்னஞ்சல்கள், வீடியோக்கள் மற்றும் கோடிங் உள்ளிட்டவைகளை ஆழ்ந்து புரிந்து கொண்டு அவற்றில் இருந்து குறிப்பு எடுத்தல், கருத்துக்களை வழங்குதல் மற்றும் தகவல்களை ஆய்வு செய்ய முடியும். பயனர்கள் ஜெமினி செயலியை டவுன்லோட் செய்யலாம். இதுதவிர கூகுள் அசிஸ்டண்ட் மூலமாகவும் ஜெமினியை இயக்கலாம்.
கூகுள் மெசேஜஸ்-இல் ஜெமினி தற்போது ஒருங்கிணைக்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு பயனர்கள் குறுந்தகவல் சார்ந்த சேவைகளை பெறலாம். இவற்றை பயனர்கள் நேரடியாக செயலியில் இருந்தே பெற்றுக் கொள்ளலாம். இந்த செயலி தற்போது ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கிறது.
முதற்கட்டமாக ஜெமினி ஆப் ஆண்ட்ராய்டில் மட்டுமே வெளியிடப்பட்டு உள்ளது. வரும் வாரங்களில் இந்த செயலி ஐ.ஒ.எஸ். தளத்திலும் வெளியாகும். இதோடு, செயலியின் வசதிகள் தற்போது இருப்பதை விட எதிர்காலத்தில் அதிகப்படுத்தப்படும்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…