latest news
என்ன நீங்களுமா!..இனி கூகுளிலும் UPI Lite வசதி வந்துருச்சி..
கூகுள்-பே சிறிய தொகைகளை எளிதாக செலுத்துவதற்காக UPI Lite எனும் சிறப்பம்சத்தினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனைகான UPI Lite ஆனது, NPCI-ஆல் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் ரூ.200/- வரையிலான பரிவர்தனைகளை ஒரே சொடுக்கில் செய்து விட முடியும்.
இந்திய ரிசர்வ் வங்கியால் கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யபட்டது UPI Lite. UPI Lite பயனாளர்களின் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருந்தாலும் பரிவர்த்தனை செய்வதற்கு வங்கியின் கோர் ஸிஸ்ட்த்தை சார்ந்து இருப்பதில்லை.
இந்த UPI Lite வெளியீட்டின் போது கூகுளின் துணைவேந்தர் அம்பரிஸ் கெங்கெ கூறுகையில் கூகுல்-பே , UPI யின் பயன்பாட்டை விரிவாக்கவும், அதிகரிக்கவும் இந்திய அரசுடனும், ரிசர்வ் வங்கி மற்றும் NPCI உடனும் சேர்ந்து செயல்படுவதில் பெருமை கொள்கிறோம்.
UPI Lite ப்ளாட்பார்ம் ஆனது குறுந்தொகைகளை மிக எளிதாக, சிரமம் இல்லாமல், அதிவேகமாக பரிவர்த்தனை செய்வதை குறிக்கோளாக கொண்டு உருவாக்கியுள்ளோம். இதுபோன்ற சிறப்பம்சங்களை Paytm மற்றும் Phonepe அதன் ப்ளாட்பார்ம்களில் ஏற்கனவே அறிமுகப்படுதியுள்ளதையும் வாசகர்கள் நினைவில்கொள்ள வேண்டும். UPI Lite-ல் ஒரு நாளைக்கு இரண்டு முறை ரூ.2000த்தினை அவரவர் வங்கியிலிருந்து மாற்றி வைத்துக்கொள்ளலாம்.
நாம் அன்றாடம் செய்யும் பரிவர்த்தனையான மளிகை, சிற்றுண்டி, காய்கறி கடைகளுக்கான ரூ.200/- வரையிலான தொகைகளுக்கு ஒரே சொடுக்கில் பணம் செலுத்தலாம்.இந்த பயன்பாட்டிற்கு வங்கியின் பின் நம்பர் உள்ளீடு செய்ய தேவையில்லை என்பதால் விரைவாக பரிவர்த்தனை முடிந்துவிடும். இதுவரை 15 வங்கிகள் UPI Lite-க்கு ஒத்துழைப்பு நல்கிவருகின்றன என்பது குறிப்பிடதக்கது..
UPI Lite எப்படி கூகுள்-பே பயனாளர்கள் ஆக்டிவேட் செய்ய வேண்டும் என்பதைபற்றி தெரிந்துகொள்வோம்..
- கூகுள்-பே ஆப்பிற்குள் நுழைய வேண்டும்.
- ஸ்கிரீனின் வலதுபுறத்தில் மேலே உள்ள ப்ரொபைள் ஐகானை சொடுக்கவும்.
- பக்கத்தின் அடி பகுதியில் ’UPI Lite’ என்று காணப்படும், அதனை சொடுக்கவும்.
- புதிய பக்கம் ஒன்று திறக்கும் அதில் குறிப்புகள் மற்றும் விபரங்கள் இடம்பெற்றிருக்கும், அந்த பக்கத்தின் அடியில் ’activate UPI Lite’ ஐ சொடுக்கவும்.
- ஸ்கிரீனில் வருவனவற்றை பின்பற்றி வங்கி கணக்கை இணைத்து விடவேண்டும்.
- அனைத்தும் முடிந்த உடன் இணைப்பை உறுதிப்படுத்தும் விதமாக ‘UPI Lite has been activated’என்கிற மெசேஜ் வந்துவிடும்.
- இனி ரூ.2000/- பணம் ஏற்றி உபயோகப்படுத்தலாம்..