கூகுள் நிறுவனம் தனது மேப்ஸ் செயலியில் இருந்து ஆஸ்திரியாவின் பிரபல இடங்களின் புகைப்படங்களை நீக்கிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இந்த புகைப்படங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்டவை என தெரியவந்துள்ளது. பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை பிரதிபலிக்கும் வகையில் இந்த படங்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.
இந்த படங்களில் ஆஸ்திரியாவின் பிரபல ஆல்பைன் ஏரிகள் நீர் வற்றிய நிலையிலும், ஆல்பைன் மலைத்தொடர்களில் பனி இல்லாமலும் காட்சியளிக்கின்றன. இந்த படங்கள் 2070 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டால் இப்படித் தான் இருக்கும் என்று கூறப்படுகிறது. லாஸ்ட் ஜெனரேஷன் எனும் குழு இந்த படங்களை கூகுள் மேப்ஸ் தளத்தில் பதிவேற்றம் செய்தது.
ஆஸ்திரியாவின் பிரபல இடங்களின் படங்கள் இவ்வாறு பதிவேற்றம் செய்ததை அறிந்த கூகுள், நேற்று (ஜூன் 22) தனது தளத்தில் இருந்து நீக்கியது. இது குறித்து அந்நிறுவனம் கூறும் போது, உண்மையில் ஒரு இடத்தை பிரதிபலிக்காத, அசல் அனுபவத்தை வழங்காமல் இருக்கும் தரவுகளுக்கு தடை விதிப்பதை நாங்கள் விதிமுறைகளாக கொண்டுள்ளோம். எங்களது விதியை மீறும் படங்களை நீக்குகிறோம், என்று தெரிவித்தது.
கூகுள் நடவடிக்கைகள் எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. அவர்கள் அதிகாரிகள் மற்றும் பெரும் நிறுவனங்கள் வரிசையில், பருவநிலை மாற்றத்திற்கு எதிரான நிலைப்பாடு கொண்டுள்ளனர் என்று கூகுள் மேப்ஸில் இந்த படங்களை பதிவிட்ட லாஸ்ட் ஜெனரேஷன் தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்து இருக்கிறது.
முன்னதாக பருவநிலை மாற்றம் காரணமாக அங்கு பயணம் செய்வோர் அதிக வெப்பநிலைக்கு ஏற்ப தயார் நிலையில் இருக்க படங்களை கூகுள் மேப்ஸில் பதிவேற்றியதாக லாஸ்ட் ஜெனரேஷன் தெரிவித்து இருந்தது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…