latest news
அட கூகுள் பிக்சல் 7 விலை இவ்வளவுதானா?..எல்லாத்துக்கும் காரணம் Nothing 2?..மாஸ் காட்டும் Flipkart..
பிரபல Foxconn நிறுவனத்தின் தயாரிப்பான கூகுள் பிக்ஸல் மொபைலானது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியானது. இந்த மொபைல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. மேலும் இந்த மொபைலானது அறிமுகம் செய்யும் போது இதன் விலை ரூ.59,999 ஆக இருந்தது. ஆனால் சமீபத்தில் நத்திங் போன் வெளியான நிலையில் இதன் விலையின் மீது கடும் தள்ளுபடியை கொடுத்துள்ளது பிரபல இ-வணிக நிறுவனமான Flipkart. தற்போது கூகுள் பிக்ஸல் 7 ரூ.7,399க்கு Flipkart-ல் கிடைக்கின்றது என்று சொன்னால் நம்பமுடியுமா?..
ஆம் உண்மைதான். கூகுள் பிக்ஸல் 7 மொபைலானது ரூ.59,999க்கு அறிமுகமானது. தற்போது இதன் மீது ரூ.12000 தள்ளுபடி கொடுத்து ரூ.47999க்கு அதன் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எச்.டி.எஃப்.சி வங்கியின் கிரெடிட் கார்ட் EMI வசதியினை எடுத்து கொண்டால் ரூ.3000 மற்றும் நமது பழைய மொபைல் நல்ல ஒரு நிலையில் இருந்து அதனை எக்ஸ்சேஞ்ச் செய்து கொண்டால் அதன் மீது ரூ.37,600 தள்ளுபடியும் கிடைக்கின்றது. எனவே தற்போது கூகுள் பிக்ஸ்லின் விலை ரூ.7,399 ஆகும்.
இந்த மொபைலானது 6.3’’ FHD+ AMOLED திரையினையும் 1080X2400 பிக்ஸல் துல்லியதன்மையையும் கொண்டுள்ளது. இது 8ஜிபி RAM மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜையும் ஆண்டிராய்டு 13 ஓஎஸ் வெர்ஷனையும் கொண்டுள்ளது. இதன் பின்புறம் 50MP பிரைமர் சென்சாரையும் 12MP அல்ட்ரா வைடு ஷுட்டரையும் முன்புறம் 10.8– செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது. எனவே கூகுள் பிக்சல் மொபைல் வாங்கலாம் என விருப்பமுள்ளவர்கள் இந்த சலுகையை பயன்படுத்தி கொள்ளலாம்.