கூகுள் நிறுவனம் சமீபத்தில் தான் பிக்சல் 9, பிக்சல் 9 ப்ரோ, பிக்சல் 9 ப்ரோ XL மற்றும் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்டு என புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்தது. 2024 ஆண்டிற்கான ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்நிறுவனம் பழைய பிக்சல் போன்களின் விலையை குறைத்து இருக்கிறது.
விலை குறைப்பு மட்டுமின்றி சில பிக்சல் போன்களின் விற்பனையை அதிரடியாக நிறுத்தியுள்ளது. விலை குறைப்பின் படி பிக்சல் 8, பிக்சல் 8 ப்ரோ, பிக்சல் 8a மற்றும் பிக்சல் 7a மாடல்கள் பயன்பெற்றுள்ளன.
புதிய விலை விவரம்:
பிக்சல் 8 (128GB) ரூ. 75,999-இல் இருந்து ரூ. 71,999
பிக்சல் 8 (256GB) ரூ. 82,999-இல் இருந்து ரூ. 77,999
பிக்சல் 8 ப்ரோ (128GB) ரூ. 1,06,999-இல் இருந்து ரூ. 99,999
பிக்சல் 8 ப்ரோ (256GB) ரூ. 1,13,999-இல் இருந்து ரூ. 1,06,999
பிக்சல் 8a (128GB) ரூ. 52,999-இல் இருந்து ரூ. 49,999
பிக்சல் 8a (256GB) ரூ. 59,999-இல் இருந்து ரூ. 56,999
பிக்சல் 7a (128GB) ரூ. 43,999-இல் இருந்து ரூ. 41,999
பிக்சல் போன்களின் விலை குறைப்பு மட்டுமின்றி கூகுள் நிறுவனம் இந்திய சந்தையில் தனது பிக்சல் 7, பிக்சல் ப்ரோ விற்பனையை நிறுத்தியுஶள்ளது. மேலும், சர்வதேச சந்தையில் பிக்சல் ஃபோல்டு சீரிஸ் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பிக்சல் பிக்சல் 7a, பிக்சல் 8 சீரிஸ், பிக்சல் 9 சீரிஸ் உள்ளிட்டவை மட்டுமே கூகுள் ஸ்டோரில் விற்பனைக்கு கிடைக்கிறது.
புதிய பிக்சல் சீரிஸ் அறிமுகத்தைத் தொடர்ந்து, பழைய போன்களை ஸ்டாக் இருக்கும் வரை விற்பனை செய்வதை கூகுள் வாடிக்கையாக கொண்டுள்ளது. அந்த வகையில், பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ விற்பனை நிறுத்தப்பட்டது கூகுள் வழக்கமாக செய்யும் நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. எனினும், கடந்த ஆண்டு மே மாதம் விற்பனைக்கு வந்த பிக்சல் போல்டு மாடலின் விற்பனை நிறுத்தப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…