Categories: latest newstech news

திருடுபோன செல்போனை எளிதில் கண்டறியலாம் – மத்திய அரசின் வேற லெவல் தொழில்நுட்பம்!

மத்திய தொலைத்தொடர்பு துறையால் உருவாக்கப்பட்டு இருக்கும் உபகரணங்கள் அடையாளப் பதிவு (Central Equipment Identity Registry-CEIR) தளம் மே 17 ஆம் தேதி இந்தியாவில் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. CEIR வலைதளத்தின் படி, இந்த சிஸ்டம் நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேதசங்களில் கடந்த மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இதே தளம் அனைத்து மாவட்டங்களிலும் வழங்கப்பட இருக்கிறது. CEIR மூலம் பயனர்கள் தொலைந்து போன தங்களது ஸ்மார்ட்போன்களை பிலாக் செய்து கொள்ளலாம்.

இவ்வாறு மொபைல் போனை பிலாக் செய்தபின், அரசாங்கம் அதனை டிராக் செய்து மீட்கும். பயனர்கள் CEIR வலைதளம் அல்லது Know Your Mobile (KYM) ஆப் மூலம் தொலைந்துபோன தங்களது ஸ்மார்ட்போனினை பிலாக் செய்யலாம். KYM செயலி ஆண்ட்ராய்டு தளத்திற்கு கூகுள் பிளே ஸ்டோரிலும், ஐஒஎஸ் தளத்திற்கு ஆப்பிள் ஆப் ஸ்டோரிலும் கிடைக்கிறது. நாடு முழுக்க 17 ஆம் தேதி CEIR சிஸ்டம் பயன்பாட்டுக்கு வரும் என்று மத்திய அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.

“இந்த சிஸ்டம் தயாராக உள்ளது. இந்த காலாண்டில் துவங்கி நாடு முழுக்க இது பயன்பாட்டுக்கு வழங்கப்பட இருக்கிறது. இதை கொண்டு பயனர்கள் தொலைந்து போன தங்களின் மொபைல் போன்களை பிலாக் அல்லது டிராக் செய்ய முடியும். இவ்வாறு செய்யும் போது, தவறு செய்தவர்கள் திருடப்பட்ட மொபைல் போன்களின் IMEI நம்பரை மாற்றி வருகின்றனர்.”

“இதனால் அவற்றை பிலாக் மற்றும் டிராக் செய்ய முடியாது. இது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்தது. தற்போதைய CEIR சிஸ்டம் குலோன் செய்யப்பட்ட மொபைல் போன்களையும் பிலாக் செய்துவிடும்,” என்று மத்திய டெலிமேடிக்ஸ் வளர்ச்சித் துறையை சேர்ந்த ராஜ்குமார் உபத்யாய் தெரிவித்தார்.

CEIR சிஸ்டம் அனைத்து மொபைல் உற்பத்தியாளர்களின் IMEI டேட்டாபேஸ் உடன் கனெக்ட் ஆகி திருடுபோன செல்போன்களை துல்லியமாக பிலாக் அல்லது டிராக் செய்யும் என்று அதிகாரப்பூர்வ வலைதளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இவ்வாறு செய்யும் போது திருடியவர் மொபைல் போனின் சிம் கார்டை மாற்றினாலும், பயன்படுத்தாத வகையில் மாற்றிவிட முடியும்.

admin

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

3 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

3 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

3 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

3 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

3 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

3 weeks ago