latest news
ஏர்பாட்ஸ் ப்ரோ 2 மாடலில் ஹியரிங் ஏய்ட் வசதி – டிம் குக் கொடுத்த சூப்பர் அப்டேட்
ஆப்பிள் நிறுவனம் தனது ஏர்பாட்ஸ் ப்ரோ 2 மாடலில் ஹியரிங் ஏய்ட் வசதி வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது. ஏர்பாட்ஸ் ப்ரோ 2 மாடல் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் அறிமுகத்தின் போது, இந்த இயர்பட்ஸில் காது கேட்க செய்யும் வசதி இருப்பதாக ஆப்பிள் தெரிவித்து இருந்தது. எனினும், இந்த வசதி அப்டேட் மூலம் பின்னர் வழங்குவதாக தெரிவித்து இருந்தது.
அந்த வரிசையில், ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி வெளியிட்டுள்ள தகவல்களில், “கேட்கும் திறன் நம் சுகாதாரத்தின் மிக முக்கிய பங்கு. ஏர்பாட்ஸ் ப்ரோ 2 மூலம் எங்களது காது கேட்க செய்யும் சுகாதார அனுபவம் மக்களின் செவி திறனை மேம்படுத்தவும், பாதுகாக்கவும், சிறப்பாக புரிந்து கொள்ளவும் செய்யும். இன்று முதல் மக்கள் வாழ்வில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் புதிய அம்சங்களை இன்று முதல் வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்,” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்த வசதியை வழங்குவதற்காக ஏர்பாட்ஸ் ப்ரோ 2 மாடலில் பில்ட்-இன் ஹியரிங் டெஸ்ட் உள்ளது. இதனை ஐபோன் அல்லது ஐபேட் மூலம் மிக எளிதாக இயக்க முடியும். இது பயனர்களுக்கு பரிசோதிக்கப்பட்ட மருத்துவ முறையில் பயனரின் தனிப்பட்ட செவி திறனை பரிசோதிக்கும் திறன் கொண்டுள்ளது. இது வழங்கும் மருத்துவ முடிவுகள் ஆப்பிள் ஹெல்த் ஆப்-இல் சேமிக்கப்படும். இதனை மருத்துவரிடம் பகிர்ந்து கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது.
புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ 2 மாடலில் பிரத்யேக ஹியரிங் ஏய்ட் மோட் உள்ளது. இது செவி திறன் குறைந்த அல்லது பாதிக்கப்பட்ட பயனர்கள் ஏர்பாட்ஸ்-ஐ செவிதிறன் சாதனமாக பயன்படுத்தும் வசதியை வழங்குகிறது. பரிசோதனையை செய்த பிறகு, ஏர்பாட்ஸ் தானாக அட்ஜஸ்ட் செய்து கொண்டு பயனர் அருகில் கேட்கும் சத்தத்தை அவர்களை கேட்க செய்யும். இது அழைப்புகள் மட்டுமின்றி, பாடல்களை கேட்கவும், வீடியோ, கேமிங் மற்றும் பல்வகை பயன்பாட்டிற்கும் ஏற்றது ஆகும்.