latest news
ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் செலவு.. இனி ஓலாவில் கூகுள் மேப் கிடையாதாம்.. அதிர்ச்சி கொடுத்த சிஇஓ…
வாடகை காரில் புது யுத்தியுடன் அறிமுகப்படுத்தப்பட்டது ஓலா நிறுவனம். பைக் முதல் கார் வரை எல்லா பயணங்களும் ஓலாவில் சரிவிகத கட்டணத்தில் மக்களால் பயணம் செய்ய முடிகிறது. தற்போது இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளில் ஓலா பயன்பாடு அதிகரித்துள்ளது.
ஓலா நிறுவனம் தன்னுடைய பயணங்களுக்கு இதுவரை கூகுள் மேப்பையே பயன்படுத்தி வந்தது. அதற்கு கட்டணமாக வருடத்துக்கு 100 கோடி வரை கொடுத்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில் இந்த செலவை குறைக்க ஓலா முடிவெடுத்து இருக்கிறது.
அதாவது இனி ஓலா செயலியில் கூகுள் மேப் பயன்படுத்த முடியாதாம். இதுகுறித்து ஓலா நிறுவனத்தின் சிஇஓ பவிஷ் அகர்வால் கூறுகையில், இதுவரை ஓலாவில் கூகுள் மேப் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதுக்கு 100 கோடி வரை கட்டணமாக கொடுத்து வந்தோம். இனி அது இல்லை. எங்களுடைய சொந்த மேப்பை உருவாக்கிவிட்டோம்.
இதனால் கூகுளில் இருந்து வெளியேறி இருக்கிறோம். இனி படிப்படியாக ஓலா மேப்பில் ஸ்ட்ரீட் வியூ,3டி மேப் மற்றும் இண்டோர் இமேஜஸ் கொண்டு வரப்பட இருக்கிறது. ஓலா மேப்பை யார் வேண்டுமென்றாலும் பயன்படுத்தலாம். எதுவும் மாற்றங்கள் வேண்டும் என்றாலும் தெரிவிக்கலாம் எனவும் பவிஷ் அகர்வால் தெரிவித்து இருக்கிறார்.