Connect with us

tech news

களமிறங்கிய HMD, வேற லெவல் போன் அறிமுகம்

Published

on

HMD நிறுவனத்தின் முற்றிலும் புது ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. HMD கிரெஸ்ட் மற்றும் HMD கிரெஸ்ட் மேக்ஸ் என அழைக்கப்படும் புது ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் பிரிவில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளன. இரு மாடல்களிலும் 6.67 இன்ச் FHD+ 90Hz OLED டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, யுனிசாட் T760 5ஜி பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய கிரெஸ்ட் மாடலில் 6GB ரேம், 6GB வரை ரேம் எக்ஸ்பான்ஷன் வசதி கொண்டுள்ளது. கிரெஸ்ட் ப்ரோ மாடலில் 8GB ரேம், 8GB ரேம் எக்ஸ்பான்ஷன் வசதி உள்ளது. இரு மாடல்களிலும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் உள்ளது. இவற்றுக்கு இரண்டு ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்களை வழங்குவதாக HMD தெரிவித்துள்ளது.

போட்டோக்களை எடுக்க கிரெஸ்ட் மாடலில் 50MP பிரைமரி கேமரா, 2MP லென்ஸ் மற்றும் 50MP செல்பி கேமரா உள்ளது. கிரெஸ்ட் மேக்ஸ் மாடலில் 64MP பிரைமரி கேமரா, 5MP அல்ட்ரா வைடு லென்ஸ், 2MP மேக்ரோ கேமரா, 50MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன்களின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் உள்ளது. இவை 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றன. இத்துடன் 33W சார்ஜிங் வசதி உள்ளது.

விலை விவரங்கள்

HMD கிரெஸ்ட் மாடல் மிட்நைட் புளூ, ராயல் பின்க் மற்றும் லஷ் லிலக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 14,499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

HMD கிரெஸ்ட் மேக்ஸ் மாடல் டீப் பர்ப்பில், ராயல் பின்க் மற்றும் அக்வா கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 16,499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரு மாடல்களின் விற்பனை ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள அமேசான் கிரேட் ஃபிரீடம் சேலில் துவங்குகிறது.

இந்த விற்பனையின் போது புதிய HMD ஸ்மார்ட்போன்கள் முறையே ரூ. 12,999 மற்றும் ரூ. 14,999 விலையில் விற்பனை செய்யப்பட உள்ளன. சிறப்பு அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

google news